Showing posts with label தொழுகை. Show all posts
Showing posts with label தொழுகை. Show all posts

Thursday, November 01, 2012

இஸ்திகாராத் தொழுகையின் சிறப்பு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

உலகப் பிரச்சினைகளில் தெளிவு பெற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறையும் துஆவும்.

இஸ்திஃகாராவின் சிறப்பு
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! யா அல்லாஹ்! அருமை நாயகம் முஹம்மது ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீது நித்திய சாந்தியையும் சமாதானத்தையும் இறக்கியருள்வாயாக!

முஸ்லிம்களுக்கு அன்றாடம் தீன், துன்யா சம்பந்தமான எத்தனையோ தேவைகள் ஏற்படுகின்றன. அவைகளை மார்க்கத்தில் சொல்லப்பட்ட முறைகளில் நிறைவேற்றும் வழிமுறைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது ஒரு மேலான சேவையாக இருக்கும். ஏனெனில் அடியான் தன்னுடைய தேவைகளை தீனில் சொல்லப்பட்ட முறையில் அடைந்து கொள்ளும்போது அது ஒரு பக்கம் இபாதத் ஆகி மறுமைக்கும் நற்பலன் அளிப்பதுடன் உலகிலேயே அல்லாஹ்வின் மறைமுகமான உதவிகளைப் பெற்று தரக்கூடியதாகவும் ஆகிவிடுகிறது.

ஆனால் இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையைப் பார்க்கையில் அவர்கள் தமது முக்கிய பிரச்சினைகளை தமது நாட்டங்களை நிறைவேற்ற தீனுக்குப் புறம்பான தவறான வழிகளை மேற்கொண்டு படைத்துப் பரிபாலிக்கும் போஷகனான அல்லாஹ்வை மறந்து யார் யாரின் கால்களையோ படித்து எவர் எவருடைய வாசல்களிலோ காத்துக்கிடந்து தீனை மறந்து நேர்வழியைத் துறந்து மகத்தான தவற்றில் வீழ்ந்துவிடுகின்றனர்.

ஆனால் அருமை நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களோ உலக மாந்தர் அனைவருக்கும் தீன் துன்யா இரண்டிற்கும் வெற்றிக்கான வழியைக் காட்டித் தந்துள்ளார்கள். உலகக் காரியங்கள் அனைத்திலும் அவர்களின் சொல், செயல், நமக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. நமது தேவைகளை அடைய, கஷ்டங்கள் அகல, கவலைகள் நீங்க, கடன்கள் தீர, தடுமாற்றமும் குழப்பமும் தீர்த்து வைக்க மேலான வழிமுறைகள் அனைத்தையும் அன்னார் நமக்குக் காற்றுத் தந்துள்ளார்கள்.
இன்று நாம் பின்னடைந்து தோல்வி அடைவதற்குரிய காரணம் அவர்களின் வழிமுறையை அறியாது இருப்பது, அல்லது அறிந்திருந்தாலும் அமல் செய்யாமல் மறந்திருப்பதுமே ஆகும்.

நமக்கு அன்றாடம் உண்டாகும் பிரச்சினைகளுக்கான சுன்னத்தான வழிமுறை இன்னது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து, அறிந்தவர் மற்றவர்களுக்கும் எத்திவைத்துச் செயல்பட வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.

ஆல்லாஹு தாஆலா நம் அனைவருக்கும் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளை வாழ்க்கையின் சகல துறைகளிலும் கடைப்பிடித்து ஒழுகி ஈருலகிலும் வெற்றி அடையும் பாக்கியசாலிகளாக ஆக்கியருள்வானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

இஸ்திகாராத் தொழுகையின் விளக்கம்

ஒருவர் ஏதேனுமொரு முக்கியமான காரியத்தைச் செய்ய நாடும்போது அதைச் செய்யலாமா அல்லது விட்டுவிடலாமா என்று மனத்தில் குழப்பமும் பிரச்சினைகளும் ஏற்படும் அதில் தன்னால் தீர்க்கமானதொரு முடிவுக்கு வர முடியாத கட்டத்தில் அவர் அல்லாஹு தஆலாவின் பக்கம் தம் கவனம் முழுவதையும் செலுத்திப் பணிவுடனும் மனத் தெளிவுடனும் அக்காரியத்தில் அல்லாஹ்வின் கிருபை நிறைந்த வழிகாட்டுதலையும் நல்லதொரு முடிவையும் கொடுக்குமாறு அவனைத் தொழுது அவனிடமே இறைஞ்சவேண்டும். இதற்கு இஸ்திகாரா (நன்மையைத் தேடி இறைஞ்சுதல்) என்று பொருள்.

மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட காரியங்களில் இஸ்திகாரா செய்வது தேவையில்லை.

இஸ்திகாரா தெழுகையின் சிறப்பு

இஸ்திகாரா என்பது நமது அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின உயர்வான போதனையிலுள்ள ஒரு சிறப்பான அம்சமாகும். இது முஸ்லிம்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட ஒரு பெரும்பேறு ஆகும். கிடைத்தற்கு அரிதான இம்மாபெரும் பொக்கிஷத்தினால் பல கோடி முஸ்லிம்கள் காலங் காலாமாகப் பல நன்மைகளை அடைந்து வந்திருக்கின்றனர்.

ஹஜ்ரத் ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: அண்ணல் நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு எவ்வாரு திருக்குர் ஆனின் சூராக்களைப் போதித்து வந்தார்களோ அவ்வாறே இஸ்திகாராவையும் மிக முக்கியத்துவத்துடன் போதித்தார்கள். மேலும் ஏதேனுமொரு மிக முக்கியமான காரியம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படும்போது இஸ்திகாரா நிய்யத்துடன் இரண்டு ரக்அத் தொழுது முடிவில் துஆ ஓதிகொள்ளுமாறு கூறவார்கள்”.

மற்றுமொறு ஹதீதில் இஸ்திகாரா செய்யக்கூடியவர்கள் தோல்வியடைவதில்லையென்றும் மனச்சஞ்சலமும் துயரமும் அடைய மாட்டார்களென்றும் மாறாக சிறப்பான நன்மைகளும் கண்ணியமான அனுபவமும் நல்ல முடிவும் அடையப்பெறுவார்கள் என்றும் வருகிறது. மேலும் அல்லாஹ்விடம் பரஞ்சாட்டி தனது காரியத்தில் ஆலோசனையைக் கேட்டால் வல்ல நாயன் தனது சம்பூர்ண அறிவு ஞானத்தாலும் தனது பெருங்கிருபையாலும் நிச்சயமாக நல்லதொரு முடிவைத் தந்தருளுவான். அல்லாஹ் நாடுவதேயன்றி வேறெதுவும் நடக்காது.

இந்த விதமாக தன்னிடம் இஸ்திகாரா செய்பவருக்கு நிச்சயம் நன்மையையே நாடுவான். இதனால் வெளிப்படையாக உடனே கைமேல் பலன் ஏற்படாவிட்டாலும் அந்தரங்கத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாவது நிச்சயம். மனிதர்களின் நற்பாக்கியம் இஸ்திகாராவில் அமைந்துள்ளது. அவர்களின் துர்பாக்கியம் இஸ்திகாராவைப் புறக்கணிப்பதில் அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இஸ்திகாரா செய்யும் முன்பாக சுன்னத்தான முறைகளப்பேணி உளு செய்து கொண்டு இரண்டு ரக்அத் இஸ்திகாரத் தொழுகையைத் தொழுகிறேன் என்று நிய்யத்துச் செய்து தக்பீர் கட்டி முதல் ரக்அத்தில் வஜ்ஜஹத்து தனாவுக்குப் பின் அல்ஹம்தும் குல்யா அய்யுஹல் காபிரூன் சூராவும் ஓதி இரண்டாம் ரக்அத்தில் அல்ஹம்தும் குல்ஹு வல்லாஹு சூராவும் ஓதித் தொழுது முடித்த பின் கீழ்க்கண்ட துஆவை ஓதி அல்லாஹ்விடம் துஆ இறைஞ்ச வேண்டும்.

இஸ்திகாரா துஆ



































துஆவின்பொருள்
யா அல்லாஹ்! உன் அறிவின் பொருட்டால் நான் உன்னிடம் நன்மையைத் தேடுகிறேன். உன்னுடைய சக்தியின் பொருட்டால் உன்னிடம் நான் சக்தியைத் தேடுகிறேன். உன்னுடைய மகத்தான கருணையை உன்னிடம் நான் வேண்டுகிறேன். நிச்சயமாக நீ (அனைத்தின் மீதும்) சக்தி பெற்றவன். நான் (எவ்வேலையைச் செய்வதற்கும்) சக்தியற்றவன். நீ (அனைத்ததையும்) அறிந்தவன். நான் (எதனையும்) அறியாதவன். நீ மறைவானவற்றை எல்லாம் அறிந்தவன். யா அல்லாஹ்! இந்த காரியத்தை * என்னுடைய தீனுக்கும் உலக வாழ்விற்கும் என்னுடைய மறுமைக்கும் நல்லதென்று நீ அறிந்திருந்தால் அதைச் செய்ய எனக்கு நீ சக்தியளித்து அதனை எனக்கு இலேசாக்கி வைப்பாயாக! மேலும் இந்தக் காரியத்தில் எனக்கு (பரக்கத்) அபிவிருத்தியையும் தந்தருள்வாயாக! இந்தக் காரியத்தை * என்னுடைய தீனுக்கும் உலக வாழ்விற்கும் மறுமைக்கும் தீமையானது என நீ அறிந்திருந்தால் என்னை விட்டும் இக் காரியத்தை நீ திருப்பி விடுவாயாக! இக் காரியத்தை விட்டு என்னையும் நீ திருப்பிவிடுவாயாக! எனக்கு எது நல்லதோ அது எங்கிருப்பினும் அதைச் செய்யச் சத்தியைக் கொடுத்து என்னை அதன் மீது பொருந்திக் கொண்டவனாக ஆக்குவாயாக!

(நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி சுன்னத்தான முறையில் நாம் நாடிய காரியங்களை அடைந்துகொள்ள அல்லாஹ் நம்மனைவருக்கும் நற்கிருபை செய்வானாக)

* இந்தக்காரியத்தை என்று வரக்கூடிய இரு இடங்களிலும் தான் நாடியுள்ள காரியத்தைப் பற்றி நினைத்துக் கொள்ள வேண்டும்.

Saturday, June 02, 2012

ஜும்ஆவும் - 1 வருடத்தில் 145 கோடி நன்மைகளும்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹீ
அன்பிற்கினிய என் அருமை சகோதர சகோதரிகளே!
ஜும்ஆ நாளன்று உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும்பள்ளி (தொழுமிடங்)களின் வாயில்களின் ஒவ்வொரு வாசலிலும் மலக்குமார்கள் அமர்ந்து முதல் நேரத்தில் வருபவர்கள், அதற்கடுத்த நேரத்தில் வருபவார்களை வரிசையாக எழுதுகிறார்கள். இமாம் (மிம்பறில்) அமர்ந்து விட்டால் (எழுதிய) தங்களது ஏடுகளை சுருட்டிக்கொள்கின்றனார்.
மேலும் இமாம் கூறும் ஜும்ஆ உரையை செவிமடுக்க வந்துவிடுகின்றனர்.முதல் நேரத்தில் வருபவர்களுக்கு உதாரணம் ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தவர்போன்றவராவார்.
அதன் பிறகு வருபவர் ஒரு மாட்டை அன்பளிப்புச் செய்தவர் போன்றவராவார்.
அதன் பிறகு வருபவர் ஒரு கடா (ஆட்டை) அன்பளிப்புச் செய்தவர் போன்றவராவார்.
அதன் பிறகு வருபவர் ஒரு கோழியை அன்பளிப்புச் செய்தவர் போன்றவராவார்.அதன் பிறகு வருபவர் ஒரு முட்டையை அன்பளிப்புச் செய்தவர் போன்றவராவார்.- என்று அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹீரைரா (ரலி) கூறியதாக நபிமொழி சுன்னத் அறிவிக்கறது.  (பார்க்க சஹீமுஸ்லிம் என்ற ஹதீஸ் வசனம்  406)
ஒரு வேலை உணவோ அல்லது 1 ருபாய் பணமோ ஏழைகளுக்கு  கொடுக்கவே 1 கோடி தடவை யோசிக்கும் நமது தீன்குலச் சசோதர, சகோதறிகளுக்கு அல்லாஹ் ஒட்டகம், மாடு,கடா, கோழி, முட்டை என எவ்வளவு நன்மைகளை நமக்காக மலக்குமார்களின் ஏடுகளில் பதியச் செய்கிறான். இது ஒவ்வொறு ஜீம்மா நாளன்றும் நமக்கு அல்லாஹ் தரக்கூடிய ஜீம்மா நன்மைகள்!
ஆனால் நாம்மில் சிலபேற் ஜும்ஆ நாளில் கடைசி நேரத்தில் இமாம் பயான் முடித்த பிறகு தொழுகைக்கு சென்று மக்களிடம் நல்லபெயரை எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இறைவனிடம்??????
நீங்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஒட்டகத்தின் விலைக்கு வாங்க எண்ணினால் எவ்வளவு தொகை செலவழிக்கவேண்டும் எண்ணிப் பாருங்கள். 
கீழ்கண்ட கணக்கு போட்டுப் பாருங்கள்
1 ஜும்ஆவிற்கு                  1 ஒட்டகம்
1 மாத ஜும்ஆக்களுக்கு   4 ஒட்டகம் (4 ஜும்ஆக்கள்)
1 வருட ஜும்-ஆக்களுக்கு  52 ஒட்டகம் (52 ஜும்ஆக்கள்)
ஒரு ஒட்டகம் சுமார் ரு.40,000 என்று வைத்துக்கொள்வோம்            
இந்த40,000 ருபாயை 52 வாரங்களுக்கு கணக்கு போடுங்கள் விடை ரு.20,80,000 என வரும்.
இந்த நன்மைகளை அல்லாஹ்வின் கணக்குப்படி பார்த்தால் (அல்லாஹ்வின் கணக்கு 1நன்மைக்கு 700 வீதம் அதாவது ரு. 20,80,000 x 700 = 145,60,00,000 நன்மைகள். உங்களால் ஒரு வருடத்தில் 145 கோடியே அறுபது இலட்சம் ருபாயை ஒருஆண்டில் சம்பாதிக்க முடியுமா?
இதனால் தான் தனது திருமறையில் ஜும்மா நாளுக்கு விரையும்படியும் அன்றையதினம் தங்களுடைய வியாபாரங்களை அந்த நேரம்மட்டும் விட்டுவிடும்படியும் அறிவுறுத்துகிறான்!.
1 ருபாய் தானம் செய்வதற்கே நாம் திக்குமுக்காடுகிறொம் சுமார் 145கோடிக்கான நன்மைகளை நாம் இழக்கலாமா?
நமது ஒரு வருடத்தில்.இந்த 1 வருட நன்மைகளான ருபாய் 145 கோடியை உங்கள் வாழ்நாளிலகணக்கு போட்டுபார்த்தால் மயக்கம் வந்துவிடுமே!
ஜும்-ஆ நாளையும் அதன் முதற்பகுதியையும் எக்காரணம் கொண்டும் தவறவிடாதீர்கள்! அது உங்களின் சுவனப்பாதையை எளிதாக்கும் விஷயமாகும்.
நம்அனைவருக்கும் ஜும்-ஆவின் நன்மைகள் அதிகமதிகம் கிடைக்க வல்ல இறைவனிடம்துவா செய்வோமாக!
இதை உங்களால் முடிந்தால் உங்கள் குடும்பத்தினருக்கும் சொல்லி நன்மைகளை அதிகமதிகம் பெற்றிடுங்கள் அவர்களும் பயன்பெறுவார்கள்!.
(எனது கருத்துக்களிலோ அல்லது கணக்குகளிலோ தவறு கண்டால் என்னை மன்னிக்கவும்)
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உறியது)

Wednesday, May 30, 2012

எப்படி எல்லாம் தொழுவதை விட, இப்படித்தான் தொழுவது என்பதே மேல்!

வாழ்வியல் நெறியினை பின்பற்றி வாழ்வது எவ்வாறு என்று அணைத்து மதங்களும், இஸ்லாமிய மார்க்கமும் சில கட்டளைகளையும், விதி முறைகளையும் விதித்துள்ளன. ஆனால் எப்படி எல்லாமும் வாழெல்லாம் என்று சிலர் நினைப்பதால் சமுதாயத்தில் ஒழுக்கக் கேடுகள் நடக்கின்றன.
 
அதே போன்று தான் அகிலத்தினைப் படைத்து, அனைத்துக் கண்டங்களையும் அதன், அதன் இடங்களிலேயே நிறுத்தி, கடலைப் படைத்து மனிதன் பயணம் செல்லும் கப்பலையும், எண்ணெய், வாயு, ஆபரண முத்து போன்றவையினயும், உணவு வகைகளையும் படைத்து, மனிதன் பூமியில் வசதியாக வாழ பொன்னும், பொருளும் வாரி வழங்கிய, ஏக இறைவனுக்கு நன்றி செலுத்த வசதியாக தொழுகையினை அல்லாஹ்  கட்டாயப் படுத்தியுள்ளான்.

 வீட்டில் இருந்து தொழுவதினை விட பள்ளிக்கு நடந்து வந்து ஜமாத்துடன் தொழுபவர்களுக்கு அல்லாஹ் பல நன்மையினை வழங்குவதாக இமாம் புகாரி சொல்லி உள்ளார்கள்.

 தொழும்போது நெற்றி,இருக்கைகள், இரண்டு கால்கள், இரண்டு கால் மூட்டுகள் ஆகிய ஏழு உறுப்புகள் சஜ்தா செய்யும் அளவிற்கு தொழ வேண்டும் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். மன அமைதிக்காகவும், உடல் உறுப்புகள் கட்டுபாடுடன் வைதிருப்பதிற்காகவும் சிலர் பணத்தினை செலவழித்து 'யோகா' கற்றுக் கொள்கிறார்கள்.

சென்னையில் சில பூங்காக்களில் யோகா பயிற்ச்சியில் முஸ்லிம் சகோதரர்களும், சகோதரிகளும் கூட கலந்து கொள்கிறார்கள். ஆனால் பயிற்சி முடிந்ததும் யோகா குருக்கள், 'பாரத் மாதாகி கி ஜே' என்று சொல்லும் போதும் முஸ்லிம் சகோதரர்களும் அறியாமல் சொல்லுகிறார்கள்.

அவர்களுக்கு நமது நாடு இந்திய நாடு என்று தெரியாமலில்லையே! பின் ஏன் பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்ல வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழாமலில்லைதானே! அப்படி யோகா நடத்தும் பயிற்சியில் யோகா குரு ராம்தேவ் படம் பெரிதாக வைக்கப் பட்டு இருக்கும். ஆகவே உருவமில்லா இறைவனுக்கு உருவம் கொடுத்து முஸ்லிம்களையும் அதற்கு ஆள் சேர்க்கும் வேலை அல்லவா இது?
ஏன் அதே அமைதியினையும், உள், புற சுத்ததினையும்  தொழுகை தரவில்லையா? மனதில் பல்வேறு அலை பாயும் முஸ்லிம்கள் தான் தொழுகையினைப் புறக்கணித்து வேறு பயிற்சிகளை தேடுவார்கள். ஈமானுள்ள எவரும் யோகா பக்கம் தலைக் காட்டாது தொழுகையில் அத்தனை உடல், உளப் பயிற்சியும் உள்ளது என்று ஐவேளை தொழுகையினை கட்டாயமாக கடைப் பிடிப்பார்கள்.
 சிலர் எப்படி எல்லாம் தொழலாம் என்ற கொள்கையினை கொண்டுள்ளதினை சில எடுத்துக் காட்டுதல் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன்:
1)   வெள்ளி தோறும் ஜும்மா தொழுகைக்கு முந்தி அடித்துக் கொண்டு வருவதினைப் பார்க்கலாம். 'ஜும்மா தொளுகையினைப் பற்றி முஸ்லிம் 1500 யில் ரசூலல்லாஹ் கூறியிருப்பதாக சொல்லும்போது, ‘மக்கள் ஜும்மா தொழுகையினை கைவிடுவதினை விலகியிருக்கட்டும், ஏனென்றால் அவர்கள் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை குத்தி அலட்சிய வாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவார்கள்' என்று கூறியதாக சொல்லப் பட்டுள்ளது.
 ஆனால் அப்படி முந்தி அடித்துக் கொண்டு பள்ளிக்கு வருகிறவர்கள், குத்பா பிரசங்கத்தினையும், குத்பாவினையும் செவி மடுத்துக் கேளாது எங்கிருந்துதான் அந்தத் தூக்கம் வருமோ, அதில் ஆழ்ந்து விடுவார்கள். அதற்கு வசதியாக தற்போது பள்ளிகளில் குளிர் சாதன வசதியும் செய்துள்ளார்கள  பின் கேட்கவா வேண்டும்.
திர்மிதி 484இல்  ரசூலல்லா கூறியிருப்பதாக சொல்லப் பட்டுள்ளதாவது, 'ஜும்மா நாளில் உங்களில் எவருக்கும் உறக்கம் வந்தால், அவர் தம் இடத்தை மாற்றிக் கொள்ளட்டும்' என்பதினை கூட அவர்கள் செய்வதில்லை.
ஆகவே தூக்கமும் கண்களை தழுவட்டுமேஎன்ற நிலையினை மாற்றி தூக்கமும் கண்களை விட்டு ஜும்மாத் தொழுகையில் அகலட்டுமேஎன்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
இடம் பிடிப்பதிற்காக பிந்தி வந்தவர்கள் இடம் இல்லாவிட்டாலும் உட்கார்ந்து இருப்பவர்கள் முதுகினை மிதித்துக் கொண்டு முன்னே செல்வது மட்டு மல்லாமல், ஜும்மா பயான் இமாம் உரத்தக் குரலில் சொல்லும்போது விட்ட தொழுகையெல்லாம் எனக்கென்ன என்று உட்கார்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் வரும் அளவிற்கு தொழுது  கொண்டு இருப்பார்கள்.

அது மட்டுமா சிலர் தொழ தக்பீர் கட்டும்போது இரண்டடி அகலத்திற்கு காலை விரித்துக் கொண்டு அடுத்தவர்க்கு இடைஞ்சல் செய்யும் அளவிற்கு நின்று கொண்டிருப்பதினைக் காணலாம்.
ரசூலல்லா சபைக்கோ அல்லது தொழுகைக்கோ பின்னால் வந்தால் பின் சப்பில் அமருவதையும், தொழுவதையும் கடைப் பிடித்தார்கள் என்று ஹதீசுகள் சொல்கிறதே! பின் ஏன் நாம் ரசூலல்லா வழி பின்பற்றக்கூடாது?

ஒரு சிலர் பய பக்தி இல்லாமல் காலை கிப்லா நோக்கி நீட்டிக் கொண்டும், சுவரிலோ, தூணிலோ சாய்ந்து கொண்டும்  உட்கார்ந்து இருப்பதினை ஜும்மா தொழுகையினில் காணலாம். அப்படி நடப்பவர்கள் எப்படி எல்லாம் தொழலாம் என்ற கொள்கையினை கொண்டவர்கள் என்று உங்களுக்குத் தோனவில்லையா?
2)   2011 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா நாட்டின் ஹான்ஸ்பி நகரில் உள்ள ஜும்மா தொழும் இடத்திற்கு சென்றேன். அது சிட்டி கவுன்சில்  கம்யுனிட்டி சென்டர் ஆகும். வெள்ளி அன்று வாடகைக்கு எடுத்து தொழுகை  நடத்துகிறார்கள். வருகை தந்தவர் மொத்தம் முப்பது பேர் ஆகும் அதில் நான்கு பேர் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு லெபனான் நாட்டுக் காரர் ஆங்கிலத்தில் பயான் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது தொழிலாளர் மூவர் மஞ்சள் ஜாக்கெட் அணிந்து வந்தார்கள். அதில் இருவர் பேகி என்ற முழங்கால் வரை உள்ள அரை ஆடையும், ஒருவர் முழங்கால் மேல் உள்ள கால் சட்டையும் அணிந்து இருந்தார். அப்போது நாற்காலியில் அமர்ந்து இருந்த ஒருவர் உட்கார்ந்து கொண்டே தனது கைலியினை கழட்டிக் கொடுத்துக் கட்டிக்கொள்ள கேட்டுக் கொண்டார்.
அப்போது அவருடைய கால்கள் முட்டிக்குக் கீழ் செயற்கைக் கால்கள் பொருத்தப் பட்டு, பேகி என்ற முட்டுக்குக் கீழ் உள்ள டவுசர் அணிந்து இருந்தார். தொழுகை முடிந்ததும் அவரை சந்தித்து நலம் விசாரித்து அவர் பெயர் ஹுசைன் என்றும் அவர் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தில் பணியாற்றும்போது கால்களை இழந்ததாக சொன்னார்.

நான் அவருடைய ஈமானையும், ஈகைக் குணத்தினையும் பாராட்டாமல் இருக்கவில்லை. அவர் தனது கைலியினைக் கொடுக்காவிட்டால் அந்த வாலிபரும் முழங்காலுக்கு மேலுள்ள டவுசரை அணிந்து தொழுதிருப்பார்.
3)   5.5.2012 அன்று இளையான்குடி மேலப் பள்ளிக்கு தொழுகச் சென்றேன். அங்கு ஒரு ஹாலில் முப்பது சேர்களுக்கு மேல் போடப்பட்டு அதில் பலர் உட்கார்ந்து தொழுதும், சஜ்தாவில் தரையில் நெற்றி வைப்பதிற்க்குப் பதிலாக எழுதும் மரப் பலகையில் நெற்றியினை வைத்து தொழுவதினையும் கண்டேன்.

தொழுகை முடித்து வெளியே வரும்போது என் பள்ளித்தோழன் கமால் கையில் ஒரு துணிப் பையினை கொண்டு வந்தான். அவனிடம் பையில் என்ன என்று கேட்டேன். அவன் சொன்னான், 'முன்பு நானும் கால் வலியால் நாற்காலியில் உட்கார்ந்து தொழுவேன்.

ஆனால் ஒரு தடவை இமாம் பயான் செய்யும் பொது நெற்றி தரையில் பட தொழுவது நல்லது என்பதால், நான் தரையில் தொழும்போது முட்டி வலிக்காமல் இருப்பதிற்காக துண்டை முட்டிக்குக் கீழ் வைத்துத் தொழுவேன் என்றான். முடியாவிட்டாலும் எனது பள்ளித் தோழனின் ஈமானை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
4)   சென்னை மண்ணடி செம்புதாஸ் பள்ளிக்கு ஜும்மா தொழுகச் செல்வேன். அங்கு ஒரு 22-25 வயது மதிக்கத் தகுந்த வாலிபர் சிறிது தாமதித்து தொழுக வந்தார். அவருடைய இடது கால் முட்டிக்கு மேல் வடிவில் வளைந்து இருந்து, வலது காலில் மாடிப் படிகளில் தத்தி தத்தி ஏறி இரண்டாவது மாடிக்கு தொழுகச் செல்வதினைக் கண்டேன்.

அவர் நினைத்து இருந்தால் முதல் மாடியிலே ஒரு நாற்காலியினை தயார் செய்து உட்கார்ந்து கொள்ளலாம். ஆனால் சற்று காலந்தாழ்த்தி வந்ததால் அவர் இரண்டாவது மாடிக்கு செல்வதுதான் சிறந்தது என்று நினைத்து சென்றார். அங்கு தொழுகச் செல்லும் பலரும் ஜும்மா நாள் அன்று காணலாம். அவருடைய ஈமானும், தொழுகையின் ஒழுக்கமும் எவ்வளவுச் சாலச் சிறந்தது என்று எண்ணி வியந்தேன்.
தொழுவதினை ஒரு சடங்காக கருதும் சிலர் இனிமேல் வாகனத்தில் அமர்ந்து சினிமா பார்ப்பது போல் வாகனங்களில் பள்ளிவாசல் முன்பு உட்கார்ந்து தொழுதாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. 
ஆகவே தொழுவது ஒரு சடங்காகக் கருதாது, அது கடமையாகக் கருதி, நம்மைப் படைத்து, பலன் பல வகை தந்து, அழகு பார்க்கும் வல்ல அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதிற்காக செய்யும் கடமையாக கருதி பய பக்த்தியுடன் நாமும் தொழுது, நமது சந்ததிகளையும் தொழச் செய்வது நமது கடமையல்லவா?
டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)