Wednesday, August 01, 2012

பெற்றபிள்ளைகளிடம்பரிவு பாசம்

அல்லாஹ்  எப்படிப்பட்டவன் 
…. நிச்சயமாக  அல்லாஹ்  மனிதர்கள்  மீது மிகப் பெரும்  கருணை காட்டுபவன்.  நிகரற்ற  அன்புடையவன். (அல்குர்ஆன்  : 2:143)
பெற்ற  பிள்ளைகளை  முத்தமிடுங்கள்  அன்பை  காட்டுவதற்காக................

நபிபெருமானர்  உதிர்த்த அ(ற)றிவுரை
ஒருநாள்  கிராமவாசி  ஒருவர் நபி  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களிடம் நீங்கள்  உங்கள் குழந்தைகளை  முத்தமிடுகிறீர்களா?  நாங்கள்  முத்தமிடுவதில்லைஎன்று  கூறினார்.  அதற்கு நபி  ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லம்  அவர்கள் கூறினார்கள்.  அல்லாஹ்  உமது இதயத்திலிருந்து  அன்பை  நீக்கியிருப்பதற்கு  நான்  பொறுப்பாளியா?”       (புகாரி, முஸ்லிம்)

நபிபெருமானர்  உதிர்த்த அ(ற)றிவுரை

மற்றொரு  நபிமொழியில்:  நபி  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களின்  பேரரான  ஹஸன்(ரழி) அவர்களை  முத்தமிட்டார்கள்; அப்போது  அருகிலிருந்த  அக்ரஃ இப்னு  ஹாபிழ்(ரழி) எனக்கு  பத்து  பிள்ளைகள்  இருக்கிறார்கள்.  நான்  அவர்களில் எவரையும்  முத்தமிட்டதில்லைஎன்றார்  அவரை  நோக்கி  பார்வையை  செலுத்திய  நபி  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்கள் எவர்  இரக்கம்  காட்டவில்லையோ  அவர் இரக்கம்  காட்டப்படமாட்டார்  என்று  கூறினார்கள்.        (நூல் :  புகாரி)
பச்சிளங்  குழந்தைகள்  மற்றும்  தாயின் மீது  பெருமானாரின்  பரிவு
நபிபெருமானர்  உதிர்த்த அ(ற)றிவுரை
நபி  ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லம்  அவர்கள் கூறினார்கள்:  நான்  தொழவைக்க  ஆரம்பிக்கிறேன்.  அதை நீளமாக்க  விரும்புகிறேன்.  அப்போது  குழந்தையின்  அழுகுரலைக்  கேட்கிறேன்.  நான்  குழந்தையின்  அழுகையால்  அதன்  தாய்க்கு  ஏற்படும்  சிரமத்தை  எண்ணி எனது  தொழுகையை  சுருக்கிக் கொள்கிறேன்.    ஆதாரம்  (நூல்கள்  : புகாரி, முஸ்லிம்)

நூஹ்  நபி தன் மகன்  மீது கொண்ட  பாசம்

நூஹ்  அலைஹிஸ்ஸலாத்து  - வஸ்ஸலாம்  அவர்களின் பாசமுள்ள  மகனைப்  பார்த்து,
என்னருமை  மகனே!  எங்களுடன்  (கப்பலில்)  நீயும் ஏறிக்கொள்; நீ  நிராகரிப்பாளர்களுடன்  ஆகிவிட  வேண்டாம், என்று  (உரக்க) அழைத்தார்.  (11:42)  ஆனால்  தன்னுடைய தந்தையின்  அழைப்புக்கு  செவிசாய்க்காத  பாசமுள்ள  அன்பு மகன்  தன்  முன்னாலேயே அல்லாஹ்வின்  தண்டனையின்  மூலம் அவ்விருவருக்குமிடையில்  ஓர்  அலை(குறுக்கே)  திரையிட்டது.  உடனே அவன்  (வெள்ளத்தில்)  மூழ்கடிக்கப்பட்டவர்களில்  உள்ளவனாகிவிட்டான்              (11:43)
நூஹ்  தம்முடைய  இறைவனை  (பிரார்த்தித்து)  அழைத்து, “என்னுடைய  இறைவனே!  நிச்சயமாக  என்னுடைய  மகன் என் குடும்பத்திலிருந்து  உள்ளவன்  தான்.  நிச்சயமாக (என்  குடும்பத்தினரைக்  காப்பாற்றுவதாக  நீ கூறிய)  உன்னுடைய வாக்கு  உண்மையானதாகும்:  நீ  தீர்ப்பளிப்போர்களில்  மேலான  நீதிபதியாக  இருக்கிறாய்என்று  கூறினார்.      (அல்குர்ஆன்:  11:45)  

அதற்கு  அல்லாஹ்வின்  பதில்

(அப்பொழுது)  நூஹே!  நிச்சயமாக  அவன் உம்  குடும்பத்தில்  உள்ளவனல்லன்; நிச்சயமாக  அவன் ஒழுக்கமில்லாச்  செயலுடையோன்  ஆவான்; எனவே, எதில்  உமக்கு (தெளிவான)  அறிவு  இல்லையோ  அதனை  என்னிடம்  நீர் கேட்க  வேண்டாம்.  அறியாதவர்களில்  உள்ளவராக  நீர் ஆவதை  விட்டும்  உமக்கு  நிச்சயமாக  நான்  உபதேசிக்கிறேன்என்று  (அல்லாஹ்) கூறினான்.     (அல்குர்ஆன்  : 11:46)

இறுதியில் 

தனது  அன்பு மகன்  தன்  முன்னாலேயே  வெள்ளப் பிரளயத்தில்  மூழ்கடிக்கப்பட்டது  பெரும் வேதனையையும், தேட்டத்தையும்  நூஹ் நபி  அலைஹிஸ்ஸலாத்து  வஸ்ஸலாம்  அவர்களுக்கு  இருந்ததையும்  சத்திய நெறி  நூல் மூலம்  அறிய முடிகிறது. 
இங்கே  இறைத்தூதர்  நூஹ்  அலைஹிஸ்ஸலாத்து  வஸ்ஸலாம்  அவர்களின்  மகன் மீது  ஏற்பட்ட பாசமும், தேட்டமும், சோதனையாக  முடிந்துபோனது. 

அல்லாஹ்விடம்  எப்படி துவா  செய்ய  வேண்டும்

யா  அல்லாஹ்!  எங்களின்  பாசமுள்ள, தேட்டமுள்ள  மக்களையும் -  எல்லா  முஸ்லிம்களையும்  இது போன்ற இழிநிலையில்  இருந்து  பாதுகாப்பாயாக!  எங்களின்  பாசத்தையும்  தேட்டத்தையும், அழகாக்கி  வைப்பாயாக!  எங்களின்  பாசமுள்ள, தேட்டமுள்ள  அன்பு  குழந்தை  செல்வத்திலிருந்து  சோதனைகளையும், வேதனைகளையும்  தந்துவிடாதே!  அவர்களையும்  எங்கள்  எல்லோரையும்  இப்றாஹீம்  அலைஹிஸ்ஸலாத்து  வஸ்ஸலாம்  அவர்களின்  மார்க்கத்தை  பின்பற்றி  நடக்கும்  பெரும்  பாக்கியத்தை  தந்தருள்  செய்வாயாக!எங்களுடைய  சந்ததிகளிலிருந்தும்  கண்களுக்குக்  குளிர்ச்சியை  எங்களுக்கு  வழங்குவாயாக!  இன்னும், தூய்மையானவர்களுக்கு  வழிகாட்டியாகவும்  எங்களை நீ  ஆக்குவாயாக

இங்கே உமர் (ரழி) அவர்களின் காலத்தில்நடந்த ஒருநிகழ்வையும் எழுதவிரும்புகிறோம் .உமர்(ரழி)அவர்கள் ஒருமனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிழ் (ரழி) அவர்கள் கூறியதுபோல குழந்தைகளை முத்தமிடமாட்டேன்என்று சொல்வதைக் கேட்டார்கள். உடனே அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்:
உமதுமனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்டவில்லையானால் எப்படி மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்கமாட்டேன் என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப்பத்திரத்தைக்  கிழித்தெறிந்தார்கள் உமர் (ரழி) அவர்கள் அப்படிஎன்றால் எந்த அளவுக்கு அன்புக்கும், கருணைக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் உள்ளது என்பதையும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதை முஸ்லிம்களாகிய நாம் அன்போடும், பாசத்தோடும், கருணையோடும், தேட்டத்தோடும் நினைத்து நினைத்து வாழவேண்டும்; அல்லாஹ் நம் எல்லோருக்கும் அருள் செய்வானாக!