அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
ஒட்டிய கன்னம். குழி
விழுந்த கண். பச்ச தலைப்பாகை. காதில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கும் பீடி.
கழுத்தில் பெரிய பாசி மாலை. கையில கொட்டு விரலுல கலர் கலராக பெரிய கல் பதிச்ச
மோதிரம்.
இந்த கெட்டப்பும் கொல்லையில நிண்ணாக் கூட காதுல கேட்கிற மாதிரி புரியாத
பாஷையில (காபாலி இசை அதாங்க A.R ரஹ்மான்
பாடுவாறுல வந்தே..தே..தே இல்லாட்டி யாதும் ஊரே...ரே...ரே அப்புடியின்னு
இழுப்பாறுல்ல அதுதான் காபாலி ராகம் ரஹ்மான் பாடினா மட்டும் புரியுமே) சத்தமாக
பாடிக்கிட்டு அம்மா முஸாபர் வந்துருக்கம்மா அப்படியின்னு கூவுகிற குரலும் உங்கள்
மனக்கண் முன் வந்து மறைகிறதா? ஆமா யார் இவுங்க? எங்கிருந்து
வருகிறார்கள்? இப்படி ஒரு கூட்டம் எப்படி உருவானார்கள்? கை கால் எல்லாம்
நல்லாதானே இருக்கு பின் ஏன் பிச்சை எடுத்து பொழைக்கனும்? இத்தனை
கேள்விகள் ஒங்க மனசுல தோன்றியிருக்கிறதா?
(ஒங்களுக்கு
தோணுதோ இல்லையோ நான் விளக்கி சொல்லாமவிடமாட்டேன்)
இந்த வீடியோவை
பாருங்கள் எந்த பாடலின் ராகத்தினை பின்னனியாக கொண்டுள்ளது தெரிகிறதா? தெரியவில்லையென்றால் நான்
எடுத்து தருகிறேன்(சாமியே அய்யப்பா அய்யப்பா சாமியே)..
இரண்டு நாள் குளிக்காமல் தலை வாராமல் பழைய
கைலியை கட்டிக்கிட்டு திரிஞ்சா நண்பர்கள் என்னடா! பக்கீர்ஷா மாதிரி திரியுற என்று
சொல்வார்களே இப்படி அசிங்கமானவர்கள் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையின் குறீயீடாக
மாறிப்போன பக்கீர்ஷாக்களின் மறுபக்கம் என்ன
தெரியுமா?
தியாகம், அர்ப்பணிப்பு, கொள்கைக்காக தன்னையே ஒப்புக்
கொடுத்தல், இந்தியாவில் இஸ்லாத்தின் தூதை பரப்பக் கூடியப் பணி
தங்களுடைய தோளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து செயல்பட்ட சிறு கூட்டம்
இவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால்
அதுதான் உண்மை!
முகலாய மன்னர்கள் இஸ்லாமிய மன்னர்கள் என்ற போர்வையில் இந்தியாவை ஆட்சி செய்த போது அவர்கள் கனவில் கூட இஸ்லாமியர்களாக நடந்துக் கொள்ளவில்லை.(ஒரு சில விதி விலக்கான மன்னர்களை தவிர) அவர்களுடைய கவனமெல்லாம் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை விரிவுப்படுத்துவது. புதிது புதிதாக உருவாகிற எதிராளிகளை எப்படி சமாளிப்பது. ஆபத்துகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற கவலையிலும் பொழுதன்னைக்கும் சண்டை போர். போர் முடிஞ்சு அரண்மனைக்கு வந்து மனதை ரிலாக்ஸ் பண்ண டான்ஸ், மது, மாது சிற்றின்பத்தில் திளைத்து மரத்து போனார்கள்.
இஸ்லாத்தை தானும் பின்பற்றி பிறருக்கும்
எத்தி வைக்கும் பணியை மறந்து ஆட்சி அதிகார மையம் சீரழிந்து போனதால் மக்களும் இந்த
காவாலிப்பயல்களிடமா மார்க்கத்தைப் பற்றி கேட்பது என்று மன்னர்களை ஒதுக்கிவிட்டு
சூபிகளிடமும் ஆலிம்களிடமும் சரண் அடைய ஆரம்பித்தார்கள். இது மன்னர்களுக்கு இன்னும்
கெட்டு சீரழிய வாய்ப்பாக போனது இதுபோன்ற கேடுகெட்ட மன்னர்களின் நடத்தையால்
மார்க்கத் தலைமை வேறு அரசியல் தலைமை வேறு என்று பிரிந்தது
(இன்றுகூட இதே
நிலைதான்).
இஸ்லாமிய கஃலீபாக்கள் ஆட்சி இப்படி இருக்கவில்லை. அரசியல்
தலைமை ஆன்மீக தலைமை இரண்டும் ஒன்றாக இருந்தது. கஃலீபா ஆட்சியும் நடத்துவார்.
இஸ்லாமிய சட்டத்தீர்ப்பும் சொல்வார். கஃலீபா தான் இமாமாக நின்று தொழுகை
நடத்துவார்...
மார்க்கத்துறைக்கு பொறுப்பேற்று இருந்த
ஆலிம்களும் சூபிக்களும் சரியான இஸ்லாத்தை
தெரிந்திருக்கவில்லை. ஒர் உயிர்த்துடிப்புள்ள சன்மார்க்க நெறியின் இடத்தை
உணர்ச்சிகளை
மரக்கச் செய்யும் வழிபாட்டுச் சடங்குகள்
பிடித்துக்கொண்டன.
அவர்கள் இஸ்லாம் பற்றிய தங்களது தெளிவற்ற மங்கலான கருத்துக்களை
கையளித்து சென்றனர்.
உண்மையில் இக்கருத்துக்கள்
இஸ்லாத்திற்கு எதிரான நம்பிக்கைகளையும்
பழக்கவழக்கங்களாகும் என்பதில்
மாற்றுகருத்தில்லை ஆனால் அவர்களுக்கு எந்த
கொள்கையை
சரியென்று
நம்பினார்களோ அன்று அவர்களுக்கு தெரிந்த இஸ்லாத்தை
பரப்புவதற்கு தன்னையே
அர்ப்பணித்தார்கள். இப்பணியைத் தமக்குக் கிடைத்த
சொற்ப வளத்தைக் கொண்டு குறைவான நபர்களை
கொண்டும் எப்படி
இந்த கொள்கையை பரப்புவது என்று இரவுபகலாக
தூக்கம் வராமல்
யோசித்தார்கள் முடிவில் அவர்களுக்கு கிடைத்த
மிகப்பொரும் ஆயுதம்
தான் அவர்களது சீடர்களான பக்கீர்கள்
கிடைத்த ஒரு சில
அழைப்பாளர்களுக்கென்று பிரத்யோகமான
சட்டங்களை சூபிக்கள் உருவாக்கினார்கள்(இந்த சட்டங்களுக்கும்
இஸ்லாத்திற்கும் எந்த
சம்பந்தமும் இல்லை என்பது வேறு விஷயம்)
1.சூபிக்களிடம் உங்களுக்கு
முழுமையாக கட்டுப்படுவேன் என்று
பையத்(சத்தியப்பிராமணம்) செய்ய வேண்டும்.
ஏனென்றால் குறைவான நபர்கள் இருந்ததால் ஒரு
தலைமையின் கீழ்
கட்டுப்பட
வேண்டிய தேவை இருந்தது.
2.உழைத்து
சம்பாதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய
வேண்டும்.
இருக்கிறதே அற்ப நபர்கள் இவர்களும் சம்பாத்தியம் வியாபரமென்று
போயிட்ட அழைப்புபணியை யார் செய்யுறது அதனால
24 மணி
நேர ஊழியர்
தேவை.
3.இந்த
வாழ்க்கையில் ஒரு பயணியை போல் வாழ வேண்டும்.
பயணி என்பதை நினைவில் மறக்காமல் இருப்பதற்காக தன்னை
முஸாபர் என்றே
அறிமுகப்படுத்த வேண்டும்
(அரபி மொழிப்படி (முஸபர்) என்றால் பயணி ஆனால்
பேச்சு வழக்கில்
பிச்சைக்காரர்களை குறிக்கும் சொல்லாக மாறியதற்கு இந்த
பக்கீர்கள்
காரணம்.
4.உலக வாழ்க்கையில் மையத்(உயிரற்ற பிணம்)
போல
இருப்பேன்
என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.
இதை ஒரு சடங்காக செய்வாகள் 6அடி குழி வெட்டி
அதில் உயிரோடு சில நொடிகள் புதைத்து அப்புறம் வெளியே எடுப்பார்கள் .அதாவது மெளத்தா
போய் விட்டார் நடமாடுவது மையத் அதற்கு எந்த ஆச பாசமும் கிடையாது.ஒருவர்
பக்கீர் ஆவது என்றால் சும்மா ஆகிவிடமுடியாது இதற்கு மேற்கூறிய நிபந்தனைகளுக்கு
கட்டுப்பட வேண்டும்.
சரி இப்ப பிரச்சாரம் பன்ன ஆட்கள் ரெடி அவர்கள் எப்படியெல்லாம்
இருக்க
வேண்டும் என்பதற்கான கொள்கை ரெடி
இனி எப்படி மக்களிடம் சென்று பிரச்சாரம்
செய்வதற்கு என்ன
ஒரு சமுதாயத்தின் கடந்த காலப் போக்கே நிகழ்கால நிலையை நிர்ணயிக்கிறது.நிகழ்கால நிலை வருங்காலத்தைப் பாதிக்கிறது.
நிகழ்கால நிலை சீராக அமையுமாயின் எதிர்காலம் சிறப்புற்று விளங்கும்.
இனி எப்படி
மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்வதற்கு என்ன
வழிமுறையை
தேர்ந்தெடுத்தார்கள் என்ற விஷயத்துக்கு வருவோம்.
ஒவ்வோரு ஊர்
ஊராக, வீடு வீடாக, மக்கள் குழுமும்
சந்தைகளில் கடைத்தெருக்களில் அலைந்து திரிந்துதான் சொல்லியாக வேண்டும்.
வெயிலில்
இருந்து தப்பிப்பதற்கு பொதுவாக அக்கால மக்கள் தலைப்பாகை கட்டுவது
வழக்கம்.
தலைப்பாகையின்
துனியின் தரம் வேலைப்பாடு,இவைகளை வைத்து மக்கள் தலைப்பாகை
அனிந்து இருப்பவரின்,அரசியல்நிலைப்பாடு,
வாழ்க்கைதரம்,அரசாங்க(மன்னனின்)பனியாளர்,குமஸ்தா, வக்கீல், என்று பிரித்து அறிந்து கொள்ளும் (யுனிபாம்
மாதிரி)விதமாக அணிவார்கள்.
பக்கீர்களும்
தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள பச்சை வண்ண தலைப்பாகையை
தேர்ந்தேடுத்தார்கள்,
(பச்சை கலர்
இஸ்லாமிய அடையாளமாகி போனதற்கு இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவைகள்.
அவை
1.இந்திய
துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த பக்கீர்கள் பச்சை கலரை இஸ்லாமிய
அடையாளமாக்கினார்கள்.
2. ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் தொடங்கி அன்றைய முழு இந்தியாவையும் ஆட்சி செய்த முகலாயர்களின்
கொடியின் நிறம் பச்சை)
<><>
<><>
<><>
<><>
<><>
<><>
![]() |
முகலாயர்களின் பச்சை
கொடி
|
<><>
<><>
<><>
<><>
<><>
<><>
காவ்வாலி இசை
சூஃபிக்களின் தெய்வீக இசையாகிப் போனது.இசை இறைவனை நெருங்குவதற்குரிய சாதனம் என்று
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிர்மறையாக விளங்கி
வைத்திருந்தார்கள் .
வீடியோவை பாருங்கள்இசையின் மூலம் இறைவனை நெருங்கிற
இலட்சனத்தை
இந்த வீடியோவையும் பாருங்கள் (பாகிஸ்தான் சூஃபி கூட்டம்)
உதாரணத்திற்கு
பக்கீர்களின் மசாலா(விடுகதையை கீழே
பாருங்கள்
ஞானவல்லி என்ற ராணியின் கேள்விகள்
"மானிலேயும்
பெரிய மான்.
அறுபடாத மான்
அது என்ன...?
மீனிலேயும்
பெரிய மீன்
அறுபடாத மீன்
அது என்ன...?
மாவிலேயும்
நல்ல மாவு
இடிபடாத மாவு
அது என்ன...?”
அப்பாஸ் மன்னரின் பதில்
மானிலேயே பெரிய
மான்
அறுபடாத
மானானது - அது
ஈ மானடி ஞானப்
பெண்ணே!
மீனிலேயும்
பெரிய மீன்
அறுபடாத
மீனானது - அது
ஆமீனடி
மெகர்பானே..!
மாவிலேயும்
நல்ல மாவு
இடிபடாத மாவும்
ஆனது - அது
'கலிமா' தானடி கண்ணே !”
எவ்வளவு
அறிவுப்பூர்வமான கேள்வி பதிலு!? சரி மசாலாக்கள் இலட்சனம்
இதுவென்றால்
கிஸாக்களைப்
பாருங்கள் விறகுவெட்டி கிஸா,ஜைத்துன் கிஸா, சலீம் அனார்கலி, லைலா மஜ்னு காதல் கதைகள் இவைப் போன்ற
கற்பனை கதை வழியாக இஸ்லாத்தை சொன்னார்கள்.
(நம்பமுடியவில்லையா ஆனால் அதுதான்
உண்மை)
பக்கீர்களின் லைலா மஜ்னு கதைகளை படியுங்கள்
லைலாவின்
தெருவில் அலைந்து கொண்டிருந்த மஜ்னூன், அவள் வீட்டின்
சுவர்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துப் பரிகாசம் செய்தவர்களின்
காதுகளில் விழுமாறு ஒரு கவிதை படிக்கிறான்:
"லைலாவின்
தெருவில்
அவள் வீட்டின் சுவர்களை
முத்தமிடுகிறேன் நான்.
இந்தச்
சுவற்றின் மீதோ
அல்லது அந்தச்
சுவற்றின் மீதோ
காதல்
கொண்டவனல்ல நான்.
என் மனதில்
பொங்கி வழிவது
அந்த
வீட்டுக்குள் இருப்பவளின் காதலே!"
இந்த கதையின்
மூலம் பக்கீர்கள் சொல்ல வரும் செய்தி என்ன தெரிகிறதா?
இறைவனைக்
காதலியாகக் குறிப்பிடும்(நவூதுபில்லாஹ்) சூபிகளின் சூழ்ச்சி இது இறைவனை பெண்ணாக
உருவகப்படுத்தி காதலியின் நினைவாகவே இருக்க வேண்டும் என்று சொல்லுகிற வழிகேடர்களின்
வார்த்தைகளை இஸ்லாம் என்று பக்கீர்கள் அறிமுகப்படுத்தினார்கள்
சூபிகளின்
காலில் விழும் போது நான் விழுவது இவர் காலாக இருந்தாலும் அவரினுள் குடியிருக்கும்
இறைவனின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அல்லவா என்று வியக்கியானம்
பேசினார்கள்.
(இன்றும்
பேசுகிறார்கள்)
என்னதான்
வியாக்கியானம் பேசினாலும் மஜ்னு மாதிரி இறைக்காதலில் சுற்றித்திரிந்தாலும் பசியும்
இயற்கையான உடல் தேவைகளும் இவர்களை விட்டு வைக்கவில்லை.
சம்பாதிப்பதை
ஹரமாக்கிக் கொண்ட இவர்கள் சாப்பாட்டுக்கும் பிற தேவைகளுக்கும் என்ன
செய்தார்கள்? எப்படி சமாளித்தார்கள்? யாரிடம் உதவிப் பெற்றார்கள் என்ற கேள்விகளை(இறைவன் நாடினால்) அடுத்த
தொடரில் பார்ப்போம்.
மகிழ்ச்சியும் பரந்த மனமும் தேடலால் ஏற்படும்.
ஏனெனில்,தேடல் தெளிவற்றதைத் தெளிவுபடுத்தும்.
தவறிப் போனதைக் கண்டுபிடித்து
தரும்.
மறைந்து கிடப்பதை கண்முன்னே நிறுத்தும்.
தங்கள் கொள்கையை சொல்வதற்காக முழு
நேரமும் முடங்கிய பக்கீர்கள் சம்பாதிப்பதை(தடுக்கப்பட்டதாக) ஹரமாக்கிக் கொண்ட இவர்கள் திருமணம்
செய்வதை(ஹரமாக) தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்ளவில்லை.ஏனென்றால் சந்நியாசம் போவதற்கு இஸ்லாத்தில் தெளிவான தடை
இருந்தது.

நபியவர்களின் காலத்திலேயே பல
(சஹாபக்கள்) தோழர்கள் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவதற்காகவும் முழுநேர அழைப்புப்
பணி செய்வதற்கும் திருமணமும் ,குடும்ப வாழ்க்கையும் பெரும் தடையாக இருக்கிறது .எனவே
திருமனம் செய்யாமல் இருப்பதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்ட போதேல்லாம்
திருமணம் செய்யாதவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை என்று முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் காட்டமான மறுப்பு தெரிவித்தார்கள்.
பக்கீர்கள் திருமண விஷயத்தில் பாதிரிமார்கள்,புத்தபிக்குகள் போன்ற
துறவிகளிடமிருந்து வித்தியாசப்பட்டார்கள்.
அமீர் குஸ்ரோவின் கவிதைகளை பாருங்கள்
கீழேயுள்ள எழுத்து
அரபி மொழி பார்சி
کافر عشقم، مسلمانی مرا در کار
نیست
هر رگ من تار گشته، حاجت زُنار
نیست
از سر بالین من برخیز ای نادان
طبیب
دردمند عشق را دارو به جز دیدار
نیست
ناخدا بر کشتی ما گر نباشد، گو
مباش!
ما خدا داریم ما ناخدا در کار
نیست
خلق میگوید که خسرو بتپرستی
میکند
آری! آری! میکنم! با خلق ما را
کار نیست
பராசீக கவிதையின் நேரடி தமிழ்
காஃபிர்-இ-இஷ்கம் முசால்மணி மாரா டார்கார்
நீஸ்ட்
ஹார் ராக்-இ முன் டார் கஷ்டா ஹஜட்-இ ஜுன்னார்
நீஸ்ட்;
ஆஜ் சார்-இ பாலீன்-இ முன் பார் கீஜ் ஐ நாடான்
டாபீப்
டார்ட் மேண்ட்-இ இஷ்க் ரா டாரூ பாஜஸ் டீடார்
நீஸ்ட்;
நாகுடா டார் காஷ்டி-இ மா கார் நாபாஷாத் கூ
முபாஷ்
மா குடா டாரீம் மாரா நாகுடா டார் கார்
நீஸ்ட்;
கால்க் மிகொயாத், கி
குஸ்ராவ் பட்பராஸ்டி மிகுனாட்
ஆரே-ஆரே மிகுனம், பா
கால்க் மாரா கார் நீஸ்ட்.
பாரசீக கவிதையின் தமிழ் அர்த்தம்
நான் ஒரு காதல் யாசகன் (தொழுபவன்):
(முஸ்லீம்களின்) கொள்கை எனக்குத் தேவையில்லை;
என்னுடைய ஒவ்வொரு நரம்பும் (விறைப்பானதைப்
போன்று) கம்பியாக மாறுகின்றன; (இந்து) வளையம் எனக்குத்
தேவையில்லை.
என்னுடைய படுக்கைப் பக்கத்தில் இருந்து
விட்டுவிட்டாய், நீ அறியாத
மருத்துவர்!
காதல் நோயாளிக்கான ஒரே மருந்து அவனது
காதலியின் பார்வை மட்டுமே –
இது தவிர வேறு எந்த மருந்தும் அவனுக்குத்
தேவையில்லை.
நமது கப்பலுக்கு மாலுமி இல்லாமல்
இருந்தால், அங்கு யாரும் இருக்க
வேண்டாம்:
நம்மிடையே கடவுள் இருக்கிறார்: மாலுமி
நமக்குத் தேவையில்லை.
குஸ்ராவ், உருவச்சிலைகளைத் தொழுகிறான் என்று உலக மக்கள்
சொல்கிறார்கள்.
அதனால் நான் அதைச் செய்கிறேன், அதனால் நான் அதைச் செய்கிறேன்; மக்கள் எனக்குத்
தேவையில்லை,
இந்த உலகம் எனக்குத்
தேவையில்லை.
அமீர் குஸ்ரோவின் இன்னோரு கவிதை
ஹிந்தி மூலத்தில்
छाप तिलक सब छीनी रे मोसे नैना
मिलाइके
प्रेम भटी का मदवा
पिलाइके
मतवारी कर लीन्ही रे मोसे नैना
मिलाइके
गोरी गोरी बईयाँ, हरी
हरी चूड़ियाँ
बईयाँ पकड़ धर लीन्ही रे मोसे नैना
मिलाइके
बल बल जाऊं मैं तोरे रंग
रजवा
अपनी सी रंग दीन्ही रे मोसे नैना
मिलाइके
खुसरो निजाम के बल बल
जाए
मोहे सुहागन कीन्ही रे मोसे नैना
मिलाइके
छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलाइके
ஹிந்தி மூலத்தின் நேரடி தமிழ்
சஹாப் டிலக் சாப் சினி ரெ மோஸ் நைனா
மிலைகெ
பாட் ஆதம் கெஹ் டினி ரெ மோஸ் நைனா
மிலைகெ
பிரேம் பஹாய் கா மாத்வா
பிலைகெ
மாட்வாலி கார் லின்ஹி ரெ மோஸ் நைனா
மிலைகெ
கோரி கோரி பையன், ஹரி
ஹரி சுரியன்
பையன் பகர் தார் லின்ஹி ரெ மோஸ் நைனா
மிலைகெ
பால் பால் ஜாவ்ன் மெயின் டோர் ராங்க்
ராஜ்வா
ஆப்னி சி கார் லின்ஹி ரெ மோஸ் நைனா
மிலைகெ
குஸ்ரோ நிஜம் கெ பால் பால்
ஜையெ
மொஹெ சுஹாகன் கின்ஹி ரெ மோஸ் நைனா
மிலைகெ
பாட் ஆதம் கெஹ் டினி ரெ மோஸ் நைனா
மிலைகெ
என்
பார்வைகள், என் அடையாளங்களை உனது ஒரு பார்வையில் எடுத்துச்
சென்றாய்.
தூய்மையான காதலில் இருந்து பழரசத்தை என்னைப்
பருகச் செய்தாய்
உனது ஒரு பார்வையில் என்னை மயக்கமுறச்
செய்தாய்;
என்னுடைய அழகான, மென்மையான மணிக்கட்டுகள் பச்சை நிற வளையல்களுடன்
இருக்கின்றன,
அவை சில கணங்கள் உன்னால் இறுக்கமாகப்
பிடிக்கப்படுகின்றன.
நான் என்னுடைய வாழ்வை உனக்குத்
தருகிறேன், ஓ என்னுடைய ஆடைகள் வண்ணம்
பெறுகின்றன,
உன்னுடைய ஒரு பார்வையில் உன் மூலமாக எனக்கு
வண்ணம் தருகிறாய்.
நான் என்னுடைய முழு வாழ்க்கையையும் உனக்குத்
தருகிறேன், ஓ நிஜாம்,
உன்னுடைய ஒரு பார்வையில் என்னை உன்னுடைய மணப்பெண்
ஆக்குகிறாய்.
"ஜீஹால்-இ-மிஸ்கீன்" என்ற
சொற்றொடர் அமீர் குஸ்டோரின் கவிதையில் இருந்து வந்தது. அந்தக் கவிதையில் இருக்கும்
தனித்துவமான விசயம், அது பெர்சியன்
மற்றும் பிரிஜ் பாஷா ஆகியவற்றில் எழுதப்பட்ட மேக்ரோனிக்காக இருக்கிறது. முதல்
அடியில், முதல் வரி பெர்சியனில் இருக்கிறது, இரண்டாவது வரி பிரிஜ் பாஷாவில் இருக்கிறது, மூன்றாவது
வரி மீண்டும் பெர்சியனில் இருக்கிறது மற்றும் நான்காவது வரி பிரிஜ் பாஷாவில்
இருக்கிறது. மீதமுள்ள அடிகளில், முதல் இரண்டு அடிகள்
பெர்சியனிலும், இறுதி இரண்டு அடிகள் பிர்ஜ் பாஷாவிலும்
இருக்கின்றன. இந்தக் கவிதை அமீர் குஸ்ரோ இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவராக
இருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது.
ஜீஹால்-இ மிஸ்கீன் மாகுன்
டாகாஃபுல்,
டுராயே நைனா பனாயே
பாட்டியன்;
கி டாப்-இ ஹிஜ்ரன் நாடாராம் ஐ
ஜான்,
நெ லெஹோ காஹெ லகாயே
சஹாடியன்.
ஷாபான்-இ ஹிஜ்ரன் டாராஸ் சன்
சுல்ஃப்
வா ரோஸ்-இ வாஸ்லட் சோ உம்ர்
கோட்டா;
சகி பியா கொ ஜோ மெயின் நா
டெகூன்
டோ கைஸ் காடூன் அந்தேரி
ராட்டியன்.
யாகாயாக் ஆஜ் தில் டு சாஷ்ம்-இ
ஜாடூ
பாசாட் ஃபேர்பாம் பாபர்ட்
டாஸ்கின்;
கிசே பாரி ஹாய் ஜோ ஜா
சுனாவி
பியாரே பி கோ ஹமாரி
பாட்டியன்.
சோ ஷாமா சோசன் சோ ஜாரா
ஹெய்ரன்
ஹமேஷா கிர்யான் பெ இஸ்க் ஆன்
மேஹ்;
நா நீண்ட் நைனா நா ஆங்
சைனா
நா ஆப் ஆவென் நா பெஜென்
பாட்டியன்.
பாஹாக்-இ ரோஜ்-இ விசால்-இ
டில்பர்
கி டாட் மாரா காரீப்
குஸ்ராவ்;
சாபெட் மான் கெ வராயே
ராகூன்
ஜோ ஜாயே பாவ்ன் பியா கெ
காட்டியன்.
அதன் மொழிபெயர்ப்பின்
தமிழாக்கம் பின்வருமாறு:
என்னுடைய துன்பத்தை என்னால் கவனிக்க
முடியவில்லை
கொஞ்சுகின்ற உனது கண்கள், கதைகள் புனைகின்றன;
என்னுடைய பொறுமை விளிம்பின் மேல்
இருக்கிறது, ஓ
மனதிற்கினியவனே,
ஏன் நீ என்னை உனது நெஞ்சுக்குள் எடுத்துச்
செல்லவில்லை.
தனிமையான இரவுகள் கூந்தல்களைப் போன்று
நீண்டதாக இருக்கின்றன,
நான் உன்னுடன் இணைந்திருக்கும் நாள்
வாழ்க்கையைப் போன்று சிறியது;
என்னுடைய விருப்பமான நண்பரை நான் பார்க்க
முடியாத போது,
இருண்ட இரவுகளை எப்படி நான்
கழிப்பேன்?
உடனடியாக, இதயம்
இருப்பதைப் போன்று, இரண்டு மயக்கும் கண்கள்
இருக்கின்றன
ஆயிரம் மாயங்கள் மற்றும் அமைதியினை அழிக்கும்
தன்மையுடன் அவை அலைகின்றன;
ஆனால் யார் அதற்காகச் சென்று புகார் அளிக்க
இயலும்
என்னுடைய இனியவருக்கு, என்னுடைய விருப்பமான நிலைக்கு?
விளக்கு ஒளிர்கிறது; ஒவ்வொரு அணுவும் திளைக்கின்றன
நான் எப்போதும் காதல் நெருப்புடன்
அலைகிறேன்;
என்னுடைய கண்களுக்கு
உறக்கமில்லை, என்னுடைய உடலுக்கு அமைதி
இல்லை,
எனக்கு எந்த செய்தியும்
வருவதில்லை, நானும்
அனுப்புவதில்லை
விருப்பமானவருடன் இணைந்திருக்கும் நாளுக்கு
மதிப்பளிக்கும் வகையில்
யார் என்னை நீண்ட காலத்திற்கு
வசப்படுத்துவார், ஓ குஸ்ராவ்;
நான் என்னுடைய இதயத்தை அடக்கி வைத்திருக்கப்
போகிறேன்,
அவருடைய இடத்திற்குச் செல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிட்டும்
வரையில்.
பக்கீர்கள் இஸ்லாமிய சட்டங்களை சரியாக கடைப்பிடித்தவைகளில்
இதுவும் ஒன்று.
ஒரு பயணிக்கு கிடைத்த நிலையில்லாத தற்கால காதலி என்று
மனைவிமார்களை விளித்தார்கள்.
தங்களுடைய குடும்ப பொருளதார தேவைகளுக்காக
ஆட்சியாளர்கள்,அன்றைய அரசியல்,அதிகாரவர்க்கத்திடம் பொருளதார உதவிகளை ஆரம்பத்தில்
பெறவில்லையென்பதை விட ஆட்சியாளர்களின் நிழல் கூட தங்களின் மீது விழாமல் ஒதுங்கி
கொண்டார்கள். அரசு விழாக்களில் கலந்துக்கொள்வதைக்கூட தவிர்த்தார்கள். இதற்கு நிறைய
வரலாற்று சான்றுகள் இருக்கின்றன உதாரணத்திற்கு.
டெல்லியை ஆண்ட கியாஸுதீன் துக்ளக்
டெல்லிக்கு அருகாமையில் துக்ளகாபாத் என்ற பெயரில் புதிய தலைநகர் கட்டி மிகப்பெரிய
விழாவாக எடுத்து ஆடம்பரமாக புதிய தலைநகர் புது அரண்மனையில் சென்று அமர்ந்திருந்த
சுல்தான் கியாஸுதீன் முன் மன்னர்களும் பிரபுக்களும் கலைஞர்களும், கவிஞர்களும்
கியுவில் நின்று வாழ்த்து தெரிவித்தனர். இந்த அரசு விழாவை அன்றைய மக்களின்
நன்மதிப்பை பெற்றிருந்த
சூஃபி ஹஜ்ரத் நிஜாமுதீன் புறக்கனித்ததையும், மன்னன் கொலை மிரட்டல்
விடுத்ததையும் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.
சாதரண பாமர மக்களிடம் தங்களுக்கு தேவையான நிதியுதவிகளை சில
நிபந்தனைகளோடு பெற்றுக் கொண்டார்கள்.
1.அவர்களாக மக்களிடம் வலிந்து எதனையும்
கேட்கக்கூடாது.
2.மக்களாக முன்வந்து தருவதை பெற்றுக் கொள்ள
வேண்டும்.
3.உணவுப்பொருட்கள் நாணயம் இவற்றை சேகரித்து வைக்கும்
நோக்கில் வாங்கக் கூடாது அன்றைய தேவைக்கு மட்டும் வாங்க
வேண்டும்.
4.ஆடைகளாக தந்தால் பழைய ஆடைகளை மட்டுமே வாங்க
வேண்டும்.
5.தானியங்கள் வேக வைக்கப்பட்டதை மட்டுமே வாங்க வேண்டும்.
பின்னாளில் இந்த விதி தளர்த்திக் கொள்ளப்பட்டது.
பொதுவாக அக்காலங்களில் கிராமங்களில் ஹோட்டல்கள் கிடையாது
ஊரு விட்டு ஊரு வந்து (முஸபராக) பயணியாக வந்து கலைநிகழ்ச்சிகள் நடத்திய
பக்கீர்களுக்கு கிராம மக்கள் உணவளித்தார்கள்
(இன்றும் பெருநகரங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட
குக்கிராம,மலைக் கிராமங்களில் இன பாகுபாடு இல்லாமல் உணவளிக்கிறார்கள்)
அல்லது தங்களிடமுள்ள தானியங்களை வீட்டுக்கு வீடு
கொடுத்தார்கள் பல மாதங்கள் கிராமங்களில் சுற்றி திரிந்துவிட்டு தங்களுடைய
வீடுகளுக்கு பக்கீர்கள் திரும்பும் போது மக்கள் கொடுத்த தானியங்களை(அரிசி, கோதுமை)
மூட்டையாக கொண்டு செல்வார்கள் ஒரு சின்ன ரெஸ்ட் எடுத்து விட்டு மறுபடியும் வேறு
கிரமங்களுக்கு கிளம்பி விடுவார்கள்.பக்கீர்கள் திரும்பி வரும் வரையில் அவர்களின்
குடும்பத்தார் ஏற்கனவேயுள்ள சேகரித்த தானியங்களை வைத்து
சமாளிப்பார்கள்.
தங்களின் கொள்கையை சொல்வதற்காக மக்களிடம் கையேந்த ஆரம்பித்த
இவர்கள் நளடைவில் ஒழுக்க தன்மன உணர்ச்சிகள் மரத்துப் போய் சறுக்கி இன்று வீட்டு
வாசல்களில் பிச்சைக்காரர்களாக எப்படி உறுமாறினார்கள் என்பதையும் அடுத்த தொடரில்
பார்ப்போம்
மார்க்கத்தைப் பொறுத்தவரை தீய செயல்களிலிருந்து விலகி வாழ்வதுதான் உண்மையான துறவறம்.தனிமை.தீயவர்கள்,வீணான கரியங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள், சீர்கேடுகளை விளைவிப்பவர்கள் ஆகியவர்களிடமிருந்து விலகிச் செல்வது தான் துறவறம்.
இந்த சூஃபியாக்கள், பக்கீர்கள் வேறு வகையான தவறான துறவறத்தை மேற்கொண்டு ஆசிரமம் அமைத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குபுறத்தில்
வாழ்ந்தார்கள். சமகால அரசியலில் என்ன நடந்தாலும் இவர்கள் சட்டை செய்வதுமில்லை.
இரண்டு வாசல்படிகளை எவன் மிதிக்கவில்லையோ அவன் பாக்கியசாலி,“ஒன்று அரசனின்
வாசல்படி, இரண்டு வைத்தியனின் வாசல்படி” என்றுதத்துவம் பேசினார்கள். இவர்களுடைய சீடர்களுக்கும்
பக்தர்களுக்கும் இதேபோதனையை
செய்தார்கள். பூமிக்கு கீழேயுள்ள(மண்ணறை வாழ்க்கை)வைகளையும் வானுக்கு மேலேயுள்ள(மறுமை
வாழ்க்கை)வைகளையும் பற்றி
மட்டும் பேச வேண்டும் என்ற இவர்களின் தத்துவமே பின்னாளில் இவர்களின்
வீழ்ச்சிக்கும் சரிவுக்கும் பாதையை
திறந்துவிட்டது. அரசாளும்வர்க்கம் “சபாஷ் இதுவல்லவா மார்க்கம்; சூபி இஸ்லாம் அமைதி புறா” என்று
புகழ்ந்தார்கள்.
இவர்கள் ஆபத்தற்றவர்கள் என்பதால்
அன்றைய ஆளும் அதிகார மையங்கள் இவர்களை பராமரித்தார்கள். இன்றும்கூட
இந்தியாவின் ஆளும் வர்க்கமாக உள்ள பார்ப்பனர்கள் வஹாபிஸத்தை எதிர்ப்பதையும் சூஃபிஸத்தை இந்தியாவிற்கு
ஏற்ற மார்க்கம் என்று புகழ்வதை
பார்த்திருப்பீர்கள். இதற்குள் வலுவான கடந்தகால அரசியல்
காரணங்கள் ஒளிந்து
கிடக்கின்றன.
இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை கொண்ட
மவோயிஸ்ட்களிலிருந்து,நாத்திகர்கள், கம்யுனிஸ்ட்கள், பின்நவீனத்துவவாதிகள் என அனைவருக்கும்,“இந்த உலக (துனியா) வாழ்க்கை
தேவையில்லை, “ராமன் ஆண்டாலும் ராவணன்
ஆண்டாலும் நமக்கேன்ன” என்கிற சூஃபிஸ கொள்கை சர்க்கரைப்பந்தலாக இனிப்பதன் கராணமும் இதுதான். அரசியல் அதிகாரங்களை
அடைய நினைக்கும் இவர்களின் அபிலாஷைகளுக்குஒருபோதும் சூஃபிகள் தடைகற்களாக இருக்கமாட்டார்கள், இருக்கவும்முடியாது.
தொடர்ந்து
ஆளும் வர்க்கமாக தொடர
நினைக்கும்
இந்துத்துவாவாதிகளும்,அதிகாரத்தை வருங்காலங்களில் கைப்பற்ற கனவு காணும் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதிகளும் மூடப்பழக்கமற்ற குர்ஆன் ஹதீஸ் அடிப்படைக் கொண்ட ஒரிறைவாதிகளை தூற்றுவதையும், தாயத்து,தட்டு, மாந்திரீகம், கல்லறைவழிபாடு போன்ற உச்சகட்ட மூடப்பழக்கத்தை மார்க்கமாக கொண்ட சூஃபிஸவாதிகளை ‘மூடப்பழக்கத்தை ஒழிக்க பிறந்த முற்போக்குவாதிகள்(!?)’ என கள்ளமவுனம் சாதிப்பதும் மறதியினாலோ,எதர்த்தமானதோ
அல்ல.
இந்துத்துவாவாதிகளும்,அதிகாரத்தை வருங்காலங்களில் கைப்பற்ற கனவு காணும் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதிகளும் மூடப்பழக்கமற்ற குர்ஆன் ஹதீஸ் அடிப்படைக் கொண்ட ஒரிறைவாதிகளை தூற்றுவதையும், தாயத்து,தட்டு, மாந்திரீகம், கல்லறைவழிபாடு போன்ற உச்சகட்ட மூடப்பழக்கத்தை மார்க்கமாக கொண்ட சூஃபிஸவாதிகளை ‘மூடப்பழக்கத்தை ஒழிக்க பிறந்த முற்போக்குவாதிகள்(!?)’ என கள்ளமவுனம் சாதிப்பதும் மறதியினாலோ,எதர்த்தமானதோ
அல்ல.
சரி விஷயத்துக்கு
வருகிறேன்
அன்றைய இஸ்லாமிய,இந்துமன்னர்கள் பற்றற்ற பக்கீர்களுக்கு காணிகளை
ஒதுக்கி, அவர்களின் மஹான்களுக்கு தர்ஹா
கட்டுவதற்கும், அதைச்சுற்றி சூழல் சார்ந்த ஆன்மீகம் வியாபரம் செய்வதற்கும் ஏதுவாக இவர்களுக்கு குடியிருப்பு
வசதிகள் போன்றவற்றை செய்து
கொடுத்தார்கள்.
தாயத்து விற்கும் பக்கீர்ஷா பிரிவை சேர்ந்த சாயிபுகளின்
வியாபர கடைகள்
கட்டும்
தாயத்துக்களை வீடு வீடாக சென்று அறுத்தெறியும்
குர்ஆன், ஹதீஸை
பின்பற்றும் தவ்ஹீத் பெண் பிரச்சாரகர்.
தற்கொலை, இணைவைப்பு இரண்டும்
(ஹாரம்) இஸ்லாத்திற்கு விரோதமானது என எச்சரிக்கும் ஒரிறைக்
கொள்கைவாதிகள். இவர்கள் ஆளும் வர்க்கங்களின் தலைவலிகள்.
வீடு வீடாக சென்று
கொட்டடித்து, மஹான்களின் அருமை
பெருமைகளை பாடி காணிக்கைகளை பெற்ற இவர்களின் நடொடி
வாழ்க்கைமுறை மாறி
பக்தர்கள் இவர்களின்
குடியிருப்புக்களை (தர்ஹாக்களை) நோக்கி வர
குடியிருப்புக்களில் தங்கி வியாபரம் செய்த
பக்கீர்களில் சாயிபுகள்,லெப்பைகள் என இரு புதிய பிரிவுகள் உண்டாகியது
(இன்றும் நாகூர்,ஏர்வாடி தர்ஹா போன்றவற்றினை நிர்வகிப்பது
சாஹிபுகள் தான்).
இந்த இஸ்லாமிய புதிய பூசாரி (சாயிபுகள்)
அல்லாத, வாய்ப்பு கிடைக்காத ஏழை பக்கீர்கள் அல்லது புகழ்பெற முடியாத ஒவ்வொரு
ஊர்களிலும் இஸ்லாத்திற்கு விரோதமாக இருக்கும் தாய்த்து தெரு குடியிருப்புவாசிகள் கொட்டடித்து பாட்டு பாடி பிழைப்பது மட்டும் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி
செய்ய முடியாததால் வேறு தொழில்களிலும் ஈடுபாட்டார்கள்.
ஆரம்பத்தில் தியாகம், அர்ப்பணிப்பு, கொள்கைக்காக
தன்னையே விட்டுகொடுத்தல், இந்தியாவில்
இஸ்லாத்தின் தூதை பரப்பக்கூடியப் பணி தங்களுடைய தோளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது
என்று நினைத்து செயல்பட்ட சிறு கூட்டம் இவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப
முடியுமா?ஆனால் அதுதான் உண்மை!
கிடைத்த ஒரு சில அழைப்பாளர்களுக்கென்று
பிரத்யேகமான சட்டங்களை சூபிக்கள் உருவாக்கினார்கள். (இந்த
சட்டங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வேறு
விஷயம்)
1.சூபிக்களிடம் உங்களுக்கு முழுமையாக கட்டுப்படுவேன்
என்று பையத்(சத்தியப்பிராமணம்) செய்ய
வேண்டும்.
(ஏனென்றால்
குறைவான நபர்கள் இருந்ததால் ஒரு தலைமையின் கீழ் கட்டுப்பட வேண்டிய தேவை
இருந்தது.)
2.உழைத்து
சம்பாதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய
வேண்டும்.
(இருக்கிறதே அற்ப நபர்கள். இவர்களும் சம்பாத்தியம்
வியாபரமென்று போய்விட்டால்
அழைப்புபணியை
யார் செய்யுறது? அதனால 24 மணி நேர
ஊழியர் தேவை.)
3.இந்த
வாழ்க்கையை ஒரு பயணியை போல் வாழ வேண்டும்.பயணி
என்பதை நினைவில் மறக்காமல் இருப்பதற்காக
தன்னை முஸாபர்என்றே அறிமுகப்படுத்த வேண்டும். (அரபி மொழிப்படி (முஸாபர்) என்றால் பயணி.ஆனால் பேச்சு
வழக்கில்
பிச்சைக்காரர்களை குறிக்கும் சொல்லாக மாறியதற்கு இந்த
பக்கீர்கள் தான் காரணம்.)
4.உலக
வாழ்க்கையில் மையத் (உயிரற்ற பிணம்) போல இருப்பேன் என்று உறுதிமொழி எடுக்க
வேண்டும்.
இதை ஒரு
சடங்காக செய்வார்கள். 6அடி குழி வெட்டி அதில் உயிரோடு சில
நொடிகள் புதைத்து அப்புறம் வெளியே எடுப்பார்கள். அதாவது ‘மெளத்தா(இறந்து) போய்
விட்டார்.நடமாடுவது மையத்(பிணம்). அதற்கு எந்த ஆச பாசமும் கிடையாது என
காட்டுவதற்கு!ஒருவர் பக்கீர் ஆவது என்றால் சும்மா
ஆகிவிடமுடியாது. இதற்கு மேற்கூறிய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட
வேண்டும்.
இப்படி
அவர்களின் அன்றைய பார்வையில் தெளிவான பிரச்சார இயக்கமாக ஆரம்பித்து இன்று
சிதைந்து சாம்பிராணி போடுவது, கந்தூரி மற்றும்
திருவிழாக்களில் பலூன் வியாபரம், அம்மி,ஆட்டுக்கல் ஆகியவற்றை உளியை
வைத்து கொத்தி கொடுப்பது,(மய்யத்) மரணித்த மனிதர்களை
அடக்குவதற்கு குழி
வெட்டுவது, வெளியூர்களுக்கு சென்று வீடு
வீடாக கொட்டடித்து பிச்சை எடுப்பது என இப்படி
அடையாளம்மாறிபோனார்கள்.