அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
இளமையேகேள்!
மவ்லவீH. அப்துர் ரஹ்மான் பாகவி M.A.,
"அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த
போதுஅவர்கள் எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக!
இன்னும்நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை சீர்திருத்தித் தருவாயாக! என்று
கூறினார்கள்”. அல்குர்ஆன்(18
:10)
கி.பி.250ல் ரோம் நாட்டின் ஒரு பகுதியில்
ஓரிறைக்கொள்கைபடி வாழ்வதற்கு சிலை வணங்கிகளை விட்டும் ஒதுங்கிய சில இளைஞர்களைப்
பற்றி குகைவாசிகள்என இறைவன் அடையாளமிட்டுக் காட்டுகிறான்.
இவ்விளைஞர்கள் வாழ்ந்த காலத்து மக்களும்,
அரசனும்குஃப்ரில்
இருந்தார்கள் என்பதும் சில இளைஞர்கள் அம்மக்களின் சிலை வணக்கத்திற்கு
முரணாகஇருந்ததை அறிந்த அந்நாட்டு மன்னன் அவ்விளைஞர்களை எச்சரித்து காலக்கெடு
விதித்தான் என்பதும்,இதன்
காரணத்தாலேயே அந்த வாலிபர்கள் பாதுகாப்புக்கு ஒரு குகையை தேர்ந்தெடுத்து
தஞ்சம்புகுந்தார்கள் என்பதும் ஏகோபித்த விரிவுரையாளர்களின் கூற்றாகும்.
தங்களை குஃப்ரைவிட்டும் பாதுகாத்து ஈமானோடு
வாழும்நோக்கோடு அக்குகையில் நுழைந்தவர்கள் 300 வருட கால சலனமற்ற உறக்கத்திற்கு பின் கி.பி.550 ல் இறைவன் அவர்களுக்கு விழிப்பை தந்தான் என்ற
செய்தியும் குர்ஆன் விரிவுரைகளில்காணக்கிடைக்கிறது.
குர்ஆனில் அல்லாஹுதஆலா இதுபோன்ற நிகழ்வுகளை
மனிதசமுதாயம் படிப்பினை பெறும் முகமாகவே கூறிக்காட்டுவான். அது போன்றே இந்த
குகைவாசிகளின்வரலாற்றிலும் இளைஞர் சமுதாயத்துக்கு பின்பற்றத் தகுந்த பல
நல்லுபதேசங்கள் கிடைக்கவேசெய்கின்றன.
இளமைப்பருவம்:-
இளமை என்பது இறைவனால் வழங்கப்பட்ட அரும்
பொக்கிஷமாகும்.அவ்விளமையை முதுமை வருவதற்கு முன்பே சரியான வழியில் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும் என்றகருத்தை போதிக்கும் நபி மொழியை நாம் கேட்டிருக்கலாம்.
கடந்த காலத்து இளைஞர்களின் சாதனைகள் குறித்தும்,சரித்திரம் படைத்த சான்றோர் குறித்த
நினைவூட்டலும் இன்றைய இளைஞர்களுக்கு தங்களின் சரியானஎதிர்காலம் குறித்த
சிந்தனைக்கு வழியாக அமையும்.
ஏனெனில் இளமை ஆற்றல் என்பது கூரிய முனைகொண்ட
ஆயுதம்போன்றது, முறையாக
பயன்படுத்தாத போது அது பேரழிவை ஏற்படுத்தாமல் விடாது. இளமை வேகம்நிகழ்த்திய
நன்மைகளும், தீமைகளும்
வரலாற்றில் பாரபட்சமின்றி இடம் பெற்றுள்ளன.
இஸ்லாமிய வளர்ச்சியில் இளைஞர்கள்:-
வரலாற்றாசிரியர்கள் கூற்றுப்படி கைபர்
யூதர்களின்பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளில் சிறு சிறு கோட்டைகள் உடனடியாக வெற்றி
கொள்ளப்பட்டன.யூதர்களின் பெரிய அரணாகத் திகழ்ந்த “கமூஸ்” எனும் கோட்டையை வெற்றி கொள்வது காலதாமதமாகிக்கொண்டே சென்றது. அன்றைய நேரத்தில்
வாலிபராக இருந்த ஹள்ரத் அலீ (ரளி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் போர் கொடியை
கொடுத்தனுப்ப, எழுபதுபேர்
கழற்றும் கோட்டைக்கதவை ஹள்ரத்அலீ (ரளி) அவர்கள் தனியாளாக தகர்த்தெறிந்து
யூதர்களின் சூழ்ச்சிக்கு முற்றுப்புள்ளிவைத்தார்கள் என்பது வரலாறு.
இஸ்லாமிய வளர்ச்சிக்கு நபியவர்கள் இளைஞர்களை
பெரிதும்பங்கு பெறச் செய்யும் வழமை கொண்டிருந்தார்கள் என்பதை இதுபோன்ற சம்பவங்கள்
உணர்த்துகின்றன.
ஒருமுறை பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே தொழுது
கொள்ளும்நபர்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறும் போது “இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களின்கரங்களில்
நெருப்புப் பந்தங்களை கொடுத்து பள்ளிவாசலுக்கு வராமல் வீட்டிலேயே
தொழுதவர்களின்வீடுகளுக்கு தீயிட்டு கொளுத்த என் மனம் நாடுகிறது” எனக் கூறினார்கள். (அபூதாவூத்)
நாளை மறுமையில் நிழலில்லாத கடுமையான
வெப்பத்தில்அல்லாஹ்வின் அர்ஷுக்கு கீழே நிழல்பெறும் ஏழு வகையான கூட்டத்தினரில்
இளைஞர் குறித்தும்ஒரு நன்மாராயம் உள்ளது.
இன்றைய இளைஞர்கள் :-
வணக்கத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கு முன்
இன்றையசூழலில் போதை பழக்கத்திற்கு அடிமைபட்டுப்போன இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டிய
கட்டாயத்திலிருக்கிறோம்.எண்ணற்ற இமாம்கள், மார்க்க விற்பன்னர்கள் மற்றும் இறைநேசர்களின் வளமான வாழ்வுக்கும்,சிறப்பான சரித்திரத்திற்கும் அவர்களது இளமை
காலம் பண்பட்டு அமைந்ததே காரணம் என்ற சத்தியவரலாறுகளை இன்றைய இஸ்லாமியர்களுக்கு
பாடமாக போதித்து, வருங்காலத்தை
வென்றெடுப்போமாக!
நன்றி : குர்ஆனின் குரல், பிப்ரவரி 2012