Thursday, May 10, 2012

நோன்பு இருந்தால் மூளைக்கு பாதிப்பில்லை – ஆய்வில் தகவல்


நோன்பு இருந்தால் மூளைக்கு பாதிப்பில்லை
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
நோன்பு அல்லது விரதம் இருப்பதால் உடலில் சர்க்கரை குறைந்துவிடும், வயிற்றில் அமிலம் சுரந்து அல்சர்(குடல் புண்) வந்துவிடும் என்று பலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. ஆனால், முஸ்லிம்கள் 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்களது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக நோன்பை வருடந்தோறும் ரமலான் மாதத்தில் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வருவதில்லை.

மேலும் மாதந்தோறும் 3 நோன்புகள், திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்புகள், வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் நோன்புகள் ஆகிய உபரியான(கட்டாயக் கடமை அல்ல) குறித்து இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்…)அவர்களுடைய நடைமுறையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
நோன்பை முஸ்லிம்கள் கடைப்பிடிப்பதற்கான காரணம் ஆன்மீக வாழ்வில் இறைவன் மீதான அச்சம் ஏற்படுவதற்காகும். இதன் காரணமாக ஒரு மனிதனின் ஆன்மீக வாழ்வு பரிசுத்தமடைகிறது.
இந்நிலையில் லண்டனில் நடந்த மருத்துவ ஆய்வில் நோன்பின் மகிமையை குறித்து தெரியவந்துள்ளது. அல்சமீர், பார்க்கின்சன் நோய்கள் முதியோருக்கு வருவதை தடுப்பது எப்படி? என்ற ஆராய்ச்சின்போதுதான் நோன்பின் மகிமை மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவந்துள்ளது.
வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு நாளோ உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவது இல்லை என்று தெரியவந்துள்ளது. சாப்பாடு அதிகம் இருந்தால் ஏராளமான கலோரி உடலுக்குள் செல்கிறது. அதை ஜீரணிக்க செரிமான உறுப்புகள்தான் உதவுகின்றன, மூளையை அது எப்படி வலுப்படுத்தும் என்று நீங்கள் கேட்கலாம்.
சாப்பிடாமல் இருக்கும்போது மூளையில் சுரக்கும் ஒரு திரவம் மூளையின் செயல்திறனைக் கூட்டுகிறதாம். இதனால் மூளைக்கு எந்தக் கேடும் வருவதில்லையாம். இதை முதலில் எலிகளிடத்திலிருந்து அறிந்தார்கள். பிறகு சில முதியவர்களிடமும் சோதித்ததில் உறுதி செய்துகொண்டார்கள்.
நோன்பு ஆன்மீக பயிற்சியுடன் மூளையின் திறனையும் வலுப்படுத்துகிறது.