Saturday, May 05, 2012

ஸுன்னத் வல் ஜமாஅத் சகோதர, சகோதரிகளே! இது உங்களுக்காக! (Must Read)

அன்பான இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!
உங்கள் அனைவரிடமும் Mail Of Islam  ஆகிய நாம் அல்லாஹ், ரஸுலுக்காகவும், இஸ்லாத்திற்காகவும் ஒரு அன்பான வேண்டுக்கோள் விடுகிறோம்.
எமது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் சகோதர, சகோதரிகள் தாங்கள் வாசித்த அல்லது பார்த்த இஸ்லாமிய ஆக்கங்களை, மற்றவர்களும் படித்து பயன் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் Share பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் இந்த ஆக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கு முன், இந்த இணையத்தளம் அல்லது அந்த பேஸ்புக் புரொபைல் (Profile or Page) யாருடையது என்று பார்ப்பதில்லை.
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் உள்ளவர்களுடையதா அல்லது இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமான வஹாபிகளுடையதா என்று பார்ப்பதில்லை. நாம் ஒரு நல்ல விடயத்தை செய்ய போய், தீமையை செய்த குற்றத்துக்கு ஆளாக கூடாது. அதாவது குளிக்கப் போய் சேற்றை பூசிக்கொண்ட கதை போன்று ஆகிவிடகூடாது.
எப்படி எனில், உதாரணமாக ஒரு இணையத்தளம் அல்லது பேஸ்புக்கில் ஒரு புரொபைலில் ஒரு கட்டுரையை வாசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது ஈயை பற்றிய அதிசயங்கள் என்ற தலைப்பில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். உடனே நீங்கள்,  நல்ல தகவல் தானே என்று நினைத்து அதை Like  செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இரண்டாவதாக வேறொரு ஆக்கத்தை போடுவார்கள். அது தொழுகையின் சிறப்புகள் என்ற தலைப்பில் இருக்கும்.

அதையும் நீங்கள்  Like & Share செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். மூன்றாவதாக ஒரு ஆக்கத்தை போடுவார்கள், அது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நம்மை போன்ற சாதாரண மனிதர் (நஊதுபில்லாஹ்) என்ற தலைப்பில் இருக்கும்.

இதை பார்த்தவுடன் நீங்கள்  Shareபகிர்ந்து கொள்ள மாட்டீர்கள். ஏனென்றால், உங்களுக்கு தெரியும் இது இஸ்லாமிய கொள்கையான ஸுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமானது என்று, ஆனால் நீங்கள் இதற்கு முன்பு இரண்டு ஆக்கங்களை பகிர்ந்து உள்ளீர்கள்.

அந்த இரண்டு ஆக்கங்களையும் உங்கள் நண்பர்கள் பார்த்து இருப்பார்கள். உங்கள் நண்பர்களில் பாமர மக்களும் இருப்பார்கள். இஸ்லாமிய அகீதாவை அறிந்தவர்களும் இருப்பார்கள். இதில் ஏற்கனவே இரண்டு ஆக்கங்களை வாசித்த பாமர மக்கள் அதாவது பெயரளவில் முஸ்லிமாக வாழும் உங்கள் நண்பர்கள், நீங்கள் Share பகிர்ந்துக்கொண்ட இணையத்தளம் அல்லது பேஸ்புக் புரொபைல் (Profile or Page) இல் போய் அங்கத்தவர்களாக அல்லது நண்பர்களாக (Member or Friend) ஆக இணைந்து இருப்பார்கள். நீங்கள் மூன்றாவது ஆக்கத்தை பகிர்ந்து கொள்ளா விட்டாலும் அவர்களுக்கு அதை வாசிக்கும் வாய்ப்பு தானாகவே கிடைக்கிறது. அந்த ஆக்கத்தை வாசித்து அதன் மூலம் அவர்களின் ஈமான் பறிபோனால், அந்த பாவத்தில் நீங்களும் ஒரு பங்காளி ஆகி விடுவீர்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 கடைசியில் ஈ இல் ஆரம்பித்து, ஈமானில் போய் முடிந்து விட்டது. இது போன்ற தந்திரங்கள் வஹாபிகளுக்கு கைவந்த கலையாகும். முஸ்லிம்களின் உள்ளத்தில் உள்ள ஈமானை பறிப்பதற்கு வஹாபிகள் கையாளும் தந்திரங்கள்தான் இவை. கறிவேப்பிலையின் சிறப்பு, நாளும் ஒரு துஆ இது போன்ற எண்ணற்ற வகையில் கட்டுரைகள், அதே போன்று, இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், Global Islam , நேர்வழி காட்டும் இஸ்லாம், Almowalith Islamiclibrary,  இது போன்ற ஏராளமான வஹாபிச பக்கங்கள்  (Pages)  உள்ளது.
இவைகளை எமது ஸுன்னத் வல் ஜமாஅத்  சகோதரர்கள் அதிகமாக Like  பண்ணியும், அதிலுள்ள ஆக்கங்களை  Like & Share செய்தும் உள்ளார்கள். இது போன்ற ஆக்கங்களை பிரசுரித்து ஒன்றும் அறியா பாமர மக்களை, வஹாபிகளின் கட்சிக்குள் உள்வாங்கும் தந்திரம் வேகமாக நடந்து வருகிறது. அதற்கு நீங்கள் துணை போக வேண்டாம்.
ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்களால் பிரசுரிக்கப்படும் ஆக்கங்களை வஹாபிகள்  Likeசெய்வதும் இல்லை, Share பண்ணுவதும் இல்லை. ஆனாலும் ஒரு கவலையான விடயம் என்னவென்றால், ஸுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் இருக்கும் ஒரு சிலர், கண்ணில் கண்ட அனைத்து ஆக்கங்களையும் பகிர்ந்து பாவத்தை சம்பாதிப்பதை பார்க்கும் போது கவலையாக உள்ளது.
 இன்னும் ஒரு கவலையான விடயம் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்களால் பிரசுரிக்கப்படும் ஆக்கங்களை, ஸுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள ஒரு சிலர்  Like செய்வதும் இல்லை, Share பண்ணுவதும் இல்லை, ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுப்பதும் இல்லை. ஆனால் வஹாபிகளின் நிலையோ இதற்கு மாற்றமாக உள்ளது.
எப்படியெனில், வஹாபிகளின் ஆக்கங்களுக்கு அவர்களுடைய ஆதரவாளர்கள் அதிகமாக ஊக்கம் கொடுத்து, அவர்களுடைய ஆக்கங்களை அதிகமாக மற்றவர்களுடன் பகிர்ந்து தங்களுடைய இயக்கத்தை வளர்க்கிறார்கள். குறிப்பாக இதில் பெண்கள் அதிகமாக உள்ளார்கள்.
ஆனால் நாமோ கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக வாழ்கிறோம். இஸ்லாத்தையும், ஈமானையும், அகீதாவையும் பாதுகாக்க வேண்டிய  விடயத்தில் நாமோ தூங்கிக் கொண்டிருக்கிறோம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: யார் ஒரு நல்ல காரியத்தை காட்டுகிறாரோ, அவருக்கு அதை செய்தவரின் நன்மை இருக்கிறது” (முஸ்லிம், அபூதாவுத், திர்மிதி, மிஷ்காத், அஹ்மத்)
இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!
எமது அன்பான வேண்டுக்கோள் என்னவெனில், எதையும் பேசும் முன் அல்லது செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்தியுங்கள். நீங்கள் பகிர்ந்துக் கொள்ளக்கூடிய ஆக்கங்களை, பிரசுரிக்கும் தனி மனிதன் அல்லது இணையத்தளம் 100 சதவீதம் இஸ்லாமிய அகீதா (ஸுன்னத் வல் ஜமாஅத்) க்கு உட்பட்டதா என்பதை, ஒன்றுக்கு இரு முறை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அப்படி உறுதிப்படுத்த முடியா விட்டால், (Share)  பகிர்ந்துகொள்ள வேண்டாம். பெயரளவில் ஸுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்க வேண்டாம். இஸ்லாமிய அறிவை சரியான முறையில் பெற்றுக்கொள்ளுங்கள்.
எமக்கு விளங்கியது மார்க்கம் அல்ல. அல்லாஹ்வும், ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும், இறைநேசர்களும் காட்டித் தந்த வழிமுறைதான் இஸ்லாமிய மார்க்கம். ஸுன்னத் வல் ஜமாஅத் இணையத்தளங்கள், அதில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கங்கள் மற்றும் ஸுன்னத் வல் ஜமாஅத் தனி நபர்களினால் பிரசுரிக்கப்படும் ஆக்கங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து இஸ்லாத்தையும், ஈமானையும், அகீதாவையும் பாதுகாக்க முயற்சி செய்யுங்கள். மாஷா அல்லாஹ்! இன்று நாம் பார்க்கிறோம், அநேகமான ஸுன்னத் வல் ஜமாஅத் சகோதர, சகோதரிகள் நிறைய ஆக்கங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்!,
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ, அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம். அல் குர்ஆன் (92:6,7)
இஸ்லாத்தை பாதுகாப்போம்!
ஈமானை பாதுகாப்போம்!
இஹ்ஸானை பாதுகாப்போம்!
குறிப்பு: இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.