Sunday, May 13, 2012

மூமின்களே எண்ணங்களும் எழுத்துக்க​ளும்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

அன்புசகோதரர்களுக்கு

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி ஒபரக்காத்துஹூ.

அல்லாஹூத்தஆலாவின்அனைத்து மகிமை நிறைந்த ஸலவாத்தும் ஸலாமும் நம்கண்மணி றஸூல்(ஸல்) அவர்களின் மீதும் அவர்களின்குடும்பத்தார்-உத்தம ஸஹாபாக்கள்-இமாம்கள்-இறைநேசச்செல்வர்கள மற்றும் அனைத்துமுஸ்லிம்கள் மீதும் என்றென்றும் நிலைக்குமாக....ஆமீன்.


மூமின்களே(சந்தேக) எண்ணங்களில் பெரும்பாலானவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்: நிச்சயமாகஅவ்வெண்ணங்களில் சில பாவமாகும்(பிறர் குறைகளை) நீங்கள் துருவி ஆராய்ந்துகொண்டிருக்க வேண்டாம்: இன்னும் உங்களில் சிலர் சிலரைப் புறம்பேசிக் கொண்டிருக்கவேண்டாம்: உங்களில் ஒருவர் தம் சகோதரனின் மாமிசத்தை (அவன்) பிணமாயிருக்கும்நிலையில் உண்ண விரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுப்பீர்களே: அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்- நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பை ஏற்கிறவன்: மிகக் கிருபையுடையவன் (49:12)
 

தவறானசெய்திகளை நம்புவதினால் ஏற்படும் தீய விளைவுகளைப் போலவே, மனதில் தோன்றும் சந்தேகமான எண்ணங்களுக்குமுக்கியத்துவம் கொடுத்தால் ஆபத்துக்கள் ஏற்படக்கூடும். சந்தேகமான எண்ணங்களில் மிகவும் தவறானவை பிறரைப் பற்றிக் குற்றமான எண்ணங்களை மனதில் சுமந்துத் திரிவதும், பின்னர் அவற்றுக்கு வடிவங்கொடுத்துபரத்துதலும் ஆகும். இதனுடன்; இணைந்தேபிறருடைய குறைகளைத் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிருப்பதும்புறங்கூறுவதுமாகும்.


பிறரைப் பற்றி எப்போதாவது புறங்கூறும்படி நேர்ந்துவிட்டால் உடனே அதற்கு ஈடு செய்யவேண்டும். அப்படி ஈடுசெய்வதில் ஒருவகை, யாரைப்பற்றி புறம்பேசினோமோ அவருக்காக துஆச் செய்வது: ';யாஅல்லாஹ்! எங்களுடையவும் அவருடையவும் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக!' என்று கேட்கவேண்டும் என்று பெருமானார்நபி(ஸல்) அவர்கள் போதித்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (குர்ஆன்தர்ஜமா- பக்கம் 150-151)


(மொழிபெயர்ப்பு: மௌலானா மௌலவி அப்துல் வஹ்ஹாப் (ரஹ்), மௌலான மௌலவி நிஜாமுத்தீன் மன்பஈ; (ரஹ்), மௌலானா மௌலவி அப்துல் காதர் பாகவி ஹஸ்ரத் அவர்கள்)


நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவான்- அல்லாஹ் நீங்கள்செய்கின்றவற்றை பார்க்கிறவன். (49:17)


இஸ்லாம் சம்மந்தப்பட்ட எல்லாரின் பேச்சுக்களையும் கேளுங்கள். எல்லோரின் கட்டுரைகளையும் செய்திகளையும் படியுங்கள்.உங்களோடு வேலைசெய்யும் பிற நாட்டு இஸ்லாமிய சகோதரர்களிடமும் உங்கள்சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.


மார்க்க கருத்துக்களை சகசகோதரர்களிடம் எப்போதும் விவாதித்துக் கொண்டிருக்க எண்ணாமல் நீங்கள் அறிந்த உண்மைகளை பிறர்மனதை காயப்படுத்தாத முறையில் நயமாகவும் நாகரீகமாகவும் தெரியப்படுத்துங்கள். அல்லாஹ்நம்மனைவருக்கும் என்றென்றும் நல்லருள்புரிவானகவும்..ஆமீன். வஸ்ஸலாம்.


ஸல்லல்லாஹூஅலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்- ஸல்அல்லாஹூ அலா முஹம்மத் யாரப்பி ஸல்லிஅலைஹி வஸல்லிம்.

 அன்புடனும் ஸலாமுடனும்,

முஹம்மத்ரஃபி கே.எம்.

துபாய்-ஐக்கிய அமீரகம்